வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-04-05
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 12, 2020

மோகல்வாடி இளைஞர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உணவுப் பொருட்கள் | Mogalvadi Youth Giving Food as a Corona Relief to People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மோகல்வாடி பகுதியில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், இருளர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு மோகல்வாடி இளைஞர்கள் சார்பாக உணவு பார்சல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.


கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு உணவு வழங்கிய இளைஞர்களை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
 

 



செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.பி.சி தேவாலய இளைஞர்கள் மூலம் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் | Corona Relief by Chengalpattu Child Line Team


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே உள்ள கொத்திமங்கலத்தில் சுமார் 150 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்களுக்கு செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.பி.சி தேவாலய இளைஞர்கள் மூலம் உணவுப் பொருட்கள் சுகாதாரமாக பார்சல் செய்து வழங்கப்பட்டது.


 

 

 

Friday, April 10, 2020

அச்சிறுபாக்கத்தில் பிரம்மாண்டமாக சாலையில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு கோலம் | Corona Awarness Drawing drawn by Acharapakkam Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பல்வேறு கொரேனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று அச்சிறுபாக்கம் ஜி.எஸ்.டி கூட்ரோடு பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும் “வீட்டில் இருப்போம் கொரோனாவை எதிர்ப்போம்” என்ற வாசகம் மற்றும் கொரோனா வைரஸினை விரட்டும் படம் அடங்கிய பிரம்மாண்ட ஓவியமானது அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி அவர்களின் தலைமையில் வரையப்பட்டது.
அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், காவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருங்குழியில் கிருமிநாசினி சுரங்க பாதையினை அமைத்த பேரூராட்சி நிர்வாகம் | Corona Disinfection Tunnel in Karunguzhi Town Panchayat

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸை அழிக்கும் கிருமி நாசினி சுரங்க பாதையினை பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.



அலுவலகத்தில் வெளியே உள்ள இந்த பாதையில் பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் இந்த அரங்கில் நுழைந்த பிறகே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர். 



இப்படி கிருமி நாசினி தெளிக்கும் பட்சத்தில் அலுவலகத்தின் உள்ளே வருபவர்களின் மீது கொரோனா வைரஸ் இருப்பின் அது அழிந்துவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 



இந்த பிரத்யேக கிருமிநாசினி பாதையானது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் கருங்குழி பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவன் தலைமையில் நிறுவப்பட்டது.


 

Thursday, April 09, 2020

இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருபவர்களின் வாகனம் பறிக்கப்படும் எனவும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்து வைரஸ் பரவாமல் இருக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்திய அரசாங்கம் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. 
இந்நிலையில் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதாகக் கூறி தேவையில்லாமல் ஊற்சுற்றி வருகின்றனர். எனவே, இப்படி சுற்றுபவர்களின் வாகனம் பறிக்கப்படுவது மட்டுமின்றி அப்படி சுற்றுபவரின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார்.
அப்படி தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டால் அந்த நபர் எதிர்காலத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நபராக கருதப்படுவார். மேலும் எதிர்காலத்தில் அரசு பணியில் சேர தகுதியில்லாத நபராக கருதப்படுவார். எனவே, அப்படி ஒரு சூழலை பொதுமக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என ஆட்டோ மூலமும் பிரச்சராம் மேற்கொண்டு வருகிறார் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன். 
மேலும், இதுநாள் வரை அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.