வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 26, 2025

மின்சார நிறுவனத்தில் வாய்ப்பு..!

தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சீனியர் அக்கவுன்டன்ட் 10, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 5, ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 109, எலக்ட்ரிக்கல் 46, மெக்கானிக்கல் 49, இ.சி.இ., 17 உட்பட மொத்தம் 248 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / சி.ஏ.,

வயது: 18--30 (1.10.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 708. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.10.2025

விவரங்களுக்கு: nhpcindia.com

Wednesday, September 24, 2025

விஜயை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு தடை.!

தி.மு.க., அரசை விமர்சித்து வரும் த.வெ.க., தலைவர் விஜயை பற்றி பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்காக, 'மக்கள் சந்திப்பு பயணம்' துவக்கி உள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும், இரண்டு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அவர், செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக அரசை விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' கூட்டத்தில் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, 'த.வெ.க., குறித்து பேசக்கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்' என மேலிடத்தின் உத்தரவை வெளிப்படையாக அறிவித்தார்.

திருவாரூரில் தி.மு.க.,முதன்மைச்செயலாளர் கே.என். நேரு பேசும் போது, 'எனது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்ட நிலையில் மேடையில் நிற்கிறேன்' என்றார். விஜய் நடத்திய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பூண்டி கலைவாணன், பெரிய கூட்டத்தைக் கூட்டினார். 

தி.மு.க., மேலிடத்தின் உத்தரவு தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறுகையில், 'மாநில அரசின் சாதனையை எடுத்துக்கூறுவதும் மற்றும் மத்திய அரசு தரும் தொந்தரவை விளக்குவதுமே எங்களின் நோக்கம். மற்ற விஷயத்தை பற்றிப் பேசுவது கவனத்தை சிதறடிக்கும்' என்றார்.

Saturday, September 20, 2025

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அமைச்சர் அன்பில் மகேஸ்.!

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு  ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.



சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்.

அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்.

நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

Monday, April 21, 2025

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி | Bike Accident near Gurukulam | Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற தடம் எண் 81 M அரசு பேருந்து முதுகரை பகுதியில்  இருந்து  மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த மெக்கானிக் பழனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, September 23, 2024

தேர்வே இல்லாமல் கனரா வங்கியில் வேலை..! 3000 பணியிடம்..! Canara Bank Bank Recruitment 2024 | Vil Ambu News

கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

Canara Bank Apprentice Recruitment 2024, Apply online for 3000 vacancies, Eligibility, Selection Process in Canara Bank



தமிழகத்தில் மட்டும் 700  காலிபணியிடங்கள்

இதற்கான கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி

விண்ணப்பம் துவங்கும் தேதி: 21.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2024

பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.10.2024 முதல் 04.10.2024 வரை

வயது வரம்பு: 

20 வயது முதல் 28 வயது வரை

இதில் OBC-Non Creamy Layer (NCL) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.

குறிப்பு: NATS-ல் பதிவு செய்திருத்தல் அவசியம்

தேர்ந்தெடுக்கப்படும் பணி: 

  • Apprentice



தேர்வு கட்டணம்: 

அனைத்து பிரிவினர்களுக்கும் (General / OBC) - ரூ.500/-

மாற்றுத்திறனாளிகள் /  மற்றும் SC/ST/ சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - தேர்வு கட்டணம் இல்லை

Categories of candidates

Number of vacancies

UR

1302

OBC

740

EWS

295

SC

479

ST

184

Total

3000 vacancies

மேலும் விவரங்களுக்கு:

https://ibpsonline.ibps.in/cabgaaug24/

https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, September 22, 2024

+2 முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை..! 3445 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளின் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

Recruitment for the various posts of Non Technical Popular Categories (12th Std Jobs)



இதற்கான கல்வித்தகுதி : 12வது வகுப்பு தேர்ச்சி

அறிவிக்கை தேதி: 20.09.2024

விண்ணப்பம் துவங்கும் தேதி: 21.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024

பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.10.2024 முதல் 22.10.2024 வரை

பிழைதிருத்தம் செய்வதற்கான தேதி: 23.10.2024 முதல் 01.11.2024 வரை

வயது வரம்பு: 

18 வயது முதல் 33 வயது வரை

இதில் OBC-Non Creamy Layer (NCL) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும்,

SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பணி: 

  • Commercial Cum Ticket Clerk
  • Accounts Clerk Cum Typist
  • Trains Clerk
  • Junior Clerk Cum Typist



தேர்வு கட்டணம்: 

அனைத்து பிரிவினர்களுக்கும் (General / OBC) - ரூ.500/-

மாற்றுத்திறனாளிகள் / பெண் / திருநங்கை / முன்னாள் படைவீரர்கள் மற்றும் SC/ST/ சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு - ரூ.250/-

மேலும் விவரங்களுக்கு:

https://www.rrbchennai.gov.in/

https://www.rrbchennai.gov.in/downloads/Final_CEN_06-2024_Undergraduate_English_V2.pdf

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, September 18, 2024

ஆவின் மூலமாக கறவை மாடு லோன் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் விவரம்..!

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 


பயனாளிக்கு அதிகபட்சம் இரண்டு கறவை மாடுகள் வாங்க ஆவின் (AAVIN) நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

கறவை மாடு பெறுவதற்கான தகுதி மற்றும் பிற விவரங்களை கான இங்கு கிளிக் செய்யவும்..!

லோன் பதிவு செய்வதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.!


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்