வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனிதர்களே இல்லாத ஊரா? இது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

மனிதர்களே இல்லாத ஊரா? இது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம்



மாற்றம் என்பது மாறாததுதான்... ஆனால் அந்த மாற்றத்தையும் எப்படி வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் உண்டுபண்ணலாம் என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி!! பொதுவாக ஜப்பான் நாடு முழுவதுமே பெரும்பாலும் தீவுகள்தான் இருக்கும். அப்படி ஒரு தீவுதான் 'ஷிகொக்கு' என்பது. இந்த தீவில் 'நகோரோ' என்ற கிராமம் இருக்கிறது. ஒரு காலத்தில் பேர் சொல்லும் கிராமம் இது. சுற்றுவட்டார மக்கள் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள். கிராமம் என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இங்கு நிறைந்திருந்தது அப்போது.


மழலை பட்டாளங்கள்
 பெரியவர்கள், குழந்தைகள் என கிராமம் எந்நேரமும் கலகலவென்றே இருக்கும். ஆனால் காலம் மாற மாற கிராமத்தில் தொழில் முடங்கியது. வறுமை வந்து சேர்ந்தது. பிழைப்பை தேடி வேறு ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாரானார்கள். இளைஞர் பட்டாளங்கள் மற்றும் சிறுவர்கள் என எல்லோருமே கிளம்பி வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்ல செல்ல கிராமத்தில் கூட்டம் குறைந்தது. (தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!

காலத்தின் கோலம்
 மக்கள் நடமாட்டமே தென்படவில்லை. அங்கு இருந்தது பெரும்பாலும் வேலை செய்ய முடியாத வயதானவர்கள்தான். மிச்சம் மீதி இருந்தது பென்ஷன்தாரர்கள். அதனால் இவர்களால் அந்த கிராமத்தை விட்டு எங்குமே நகர முடியாத சூழல். இப்படித்தான் காலத்தின் கோலத்தால் அந்த கிராமத்தை விட்டுசென்றார் அயனோ சுகிமி என்ற பெண். 67 வயதாகிறது.



ஷாக் ஆன சுகிமி
 ஒசாகா நகருக்கு சென்று ஒரு வேலையை தேடி கொண்டு கடுமையாக உழைத்தார். இப்படியே பல ஆண்டுகள் சென்றுவிட்டது. ஒருநாள் சுகிமிக்கு தான் பிறந்த கிராமத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்துடனும், ஆசையுடனும், சுகிமி அந்த கிராமத்துக்கு வந்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கிராமத்தில் காலடி வைத்த சுகிமிக்கு ஷாக் தூக்கி வாரி போட்டது.


ஆள் அரவம் இல்லை 
 மக்கள் நடமாட்டமே இல்லாமல், கிராமம் வெறிச்சோடியது... மனித தலைகளை எங்கேயும் காணோம்... ஆட்களின் சத்தம் தொலைவில் கூட கேட்கவில்லை சுகிமிக்கு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. ஜனநெருக்கடியில் தடுக்கி விழுந்து ஓடியாடி விளையாடிய நாட்களை சுகிமி நினைக்க நினைக்க அந்த வேதனையை அவரால் தாங்கவே முடியவே இல்லை. ஆள் அரவம் இல்லாத தன் கிராமத்தை பார்க்க சுகிமிக்கு பிடிக்கவே இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தார்.



மனித பொம்மைகள் 
 கிராமத்தில் பார்த்த மனித உருவங்களை மனதில் வைத்துக் கொண்டே நிறைய பொம்மைகளை தயார் செய்ய தொடங்கினார். அதற்கு அழகழகாக முகங்களை செதுக்கினார். கலர் கலராக ஆடைகளை உடுத்திவிட்டார். அதோடு விடவில்லை சுகிமி.. பொம்மையிலேயே பஸ் ஸ்டாப் ரெடி ஆனது. மார்க்கெட் தயாராகிவிட்டது. பஸ் ஸ்டாப், மார்க்கெட்டுகளை சாலை ஓரங்களில் கொண்டுபோய் வைத்தார். மனித பொம்மைகளையும் ஆங்காங்கே நிற்க வைத்தார்.


பொம்மை மாணவர்கள்
 கிட்டத்தட்ட தான் பார்த்த கிராமம் போலவே இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு குறை சுகிமிக்கு இருந்து கொண்டே இருந்தது. அது வேறொன்றுமில்லை.. பள்ளிக்கூடம்தான்! அப்போது கிராமத்தில் பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது. ஆனால் பிள்ளைகள் இல்லாததால் மூடப்பட்டிருந்தது. அதனால் சுகிமி பொம்மை மாணவர்களை தயார் செய்தார். மாணவர்கள் படிப்பது போல, டீச்சர் பாடம் நடத்துவதுபோல என தயார் செய்யப்பட்ட பொம்மைகளை அந்த பள்ளி அறைக்குள் கொண்டு போய் வைத்தார். இப்போதுதான் சுகிமிக்கு திருப்தியானது.



உயிரூட்டினார்
 மொத்தம் 350 பொம்மை இதுபோல செய்திருக்கிறார் சுகிமி. இப்போது அந்த கிராமத்தில் இந்த பொம்மைகள்தான் சுகிமிக்கு மனிதர்கள்... வெறிச்சோடிய கிராமத்தை தன் கை வண்ணத்தால் பொம்மைகளை உலவ விட்டு உயிரூட்டி வருகிறார். இப்போது 29 உயிருள்ள மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் இந்த கிராமத்தில். இதில் சுகிமியும் ஒருவர்.


நிரம்பி வழிகிறது
 இதில் வேடிக்கை என்னவென்றால், மக்களே இல்லாத இந்த கிராமத்தை பொம்மையால் அலங்கரித்த விஷயத்தை கேள்விப்பட்டு, சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்துக்கு வர துவங்கி விட்டார்களாம். அதனால் கிராமமே கூட்டத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறதாம்.. இதை பார்க்க பார்க்க இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் சுகிமி.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment