வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

திருநீறை கையில் வாங்கும்போதும் நெற்றியில் வைக்கும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்கோவிலுக்கோ ஏதேனும் பூஜையிலோ அல்லது வீட்டிலோ சாமி கும்பிட்டு முடித்ததும் திருநீறை நெற்றியில் பூசுகின்ற பழக்கம் இருக்கிறது. அப்படி நெற்றியில் திருநீறு கையில் எடுக்கின்ற பொழுதும் அதை நெற்றியில் வைக்கின்ற பொழுதும் சில வழிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க வேண்டும். அவற்றைப் பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.
வலது கை
 ஒருவரிடம் இருந்து திருநீறை வாங்குகின்ற பொழுது, உங்களுடைய இடது கையினை கீழே வைத்துக் கொண்டு, வயது கையால் வாங்குதல் வேண்டும்.
(தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
இடது கை 
 வலது கையால் திருநீறை வாங்குகின்ற பொழுது, உடனே நாம் என்ன செய்வோம். பொதுவாக, அந்த திருநீறை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டு, பின் வலது கையால் எடுத்து நெற்றியில் பூசுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. அப்படி ஒருபோதும் வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றக்கூடாது.


தூய தாள் 
 வலது கையில் உள்ள திருநீறை இடது கைக்கு மாற்றக் கூடாது. அப்படியெனில் வலது கையில் உள்ள திருநீறை ஒரு தூய்மையான பேப்பரில் அல்லது பூஜைக்கு எடுத்துச் சென்ற தேங்காய் ஆகியவற்றில் வைத்துக் கொள்ளலாம். 


கீழே சிந்துதல்
 திருநீறை சிலர் வைத்துக் கொண்டபின், அதை கோவிலாக இருந்தால் ஏதேனும் தூண்களில் கொட்டி விடுவார்கள். அல்லது கீழே கொட்டி விடுவார்கள். அப்படி செய்வது மிகமிகத் தவறு. திருநீறை ஒருபோதும் கீழே சிந்தவே கூடாது. ஒருவேளை அப்படி சிந்திவிட்டால், அந்த இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.


கோவில் தூண்

கோவில்களில் வாங்குகின்ற திருநீறை மீண்டும் கோவிலில் ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது தரையிலோ அல்லது தூண்களிலோ கொட்டிவிடக் கூடாது.


நெற்றியில் பூசும்போது,
 திருநீறை நெற்றியில் வைக்கின்ற பொழுது, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் திரும்பி நின்றவாறு தான் நெற்றியில் இட வேண்டும்.

மந்திரம்
 திருநீறு நெற்றியில் பூசுகின்ற பொழுது, சிவனுடைய நாமங்களான சிவ சிவ, ஓம் நமச்சிவாய, ஓம் சிவாய நமஹ ஆகிய மந்திரங்களை உச்சரித்தல் நலம்.


இஷ்ட தெய்வம்
 திருநீறை நெற்றியில் அணியும் போது, சிவனைப் போலவே அவரவர் இஷ்ட தெய்வங்களையும் மனதில் நிறைத்து வழிபட்டுக் கொண்டே வைக்க வேண்டும். திருநீறு என்றால், ஐஸ்வர்யம் என்று பொருள். அப்படியென்றால், ஐஸ்வர்யம் முழுமையாக நம்மிடம் வர வேண்டும் என்று நினைத்து திருநீறு வைக்க வேண்டும்.பட்டை போடுதல் 
 ஆண்களில் சிலர் திருநீறை நெற்றியில் பட்டையாக அணிவதுண்டு. அப்படி பட்டைஇடுவதற்கும் சில முறைகள் உண்டு. ஆம். நெற்றியில் திருநீறை பட்டையாக அணிகின்ற பொழுது, இடது கண்ணினுடைய புருதவத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து வலது கண் புருவத்தின் இறுதி வரையிலும் அணிய வேண்டும்.


குங்குமம் 
 முழு நெற்றியிலும் திருநீறை அணிந்து கொள்ளலாம். அவ்வாறு அணிந்து கொண்டு, இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளுக்குரிய குங்குமத்தை இட்டுக் கொள்ளலாம்.நன்மைகள்
 ஆன்மீகத்தில் திறுநீறு அணிவதால் நிறைய நன்மைகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை, சிவனருள் கிடைக்கும் மன அமைதி உண்டாகும் ஹிப்னாடிசம் செய்ய நடுநெற்றியை தான் பயன்படுத்துவார்கள். அதே திருநீறு, குங்குமம் வைத்த இடத்தில் ஹிப்னாடிசம், செய்வினைகள் தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. திருநீறு நம் நெற்றி மற்றும் தலையில் தேங்கும் தேவையற்ற நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. திருநீறு இட்டுக் கொண்டு வெளியே சென்றால், கண் திருஷ்டி உண்டாகாமல் தவிர்க்கலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment