வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Child Care
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Child Care. Show all posts
Showing posts with label Child Care. Show all posts

Friday, October 19, 2018

பெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன்



ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். குழந்தைகளிடம் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை வளர்க்க உதவும். 

பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.


நாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
   (தொடர்ச்சி கீழே...)  



இதையும் படிக்கலாமே !!!

இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.



ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும்.
 


மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Saturday, October 13, 2018

ஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா?



குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம். 
                           
ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.

உணவு பதப்படுத்தல் 
சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


சால்மோனெல்லா  
மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.
                                                     

மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?
நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!

4 மணிநேரம் 
மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.


ஃப்ரீசரில் வைத்த உணவு 
ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

சோதிக்கும் முறை:
ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

முடிவு 
 நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Friday, October 12, 2018

குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?



பிறந்த பச்சிளம் குழந்தைகள் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்; குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள், சிறு விஷயங்களால் கூட பாதிக்கப்படும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருப்பார்கள்; குழந்தைகள் வளர வளர தான் அவர்கள் தாய்ப்பால் மூலம், தாய் கொடுக்கும் சத்தான உணவுகள் மூலம் பலம் பெறுவர்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தலையணை பயன்படுத்துவர்; ஆனால் அது பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அவர்கள் அறிந்து இருக்க மாட்டார்கள். குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தலையணை தேவையா? 
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளும் ஒரு பழக்க வழக்கம், படுக்கும் பொழுது தலையணை வைத்து கொள்வது. தலையணை வைத்து படுப்பதால், உடலின் இரத்த ஓட்டம் முக்கியமாக தலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனாலும் தலையணை இல்லாமல் நம்மால் தூங்க முடியாத அளவுக்கு தலையணை பழக்கத்தை நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆக்கி விட்டோம்.!



குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா?
 குழந்தைகளுக்கு தலையணை என்பதை நாம் பயன்படுத்த காரணமாக இருப்பது, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையே. குழந்தைகள் கட்டிலில் உறங்கும் பொழுது, அவர்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க பெற்றோர்கள் தலையணையை வைப்பது வழக்கம். ஆனால் பல பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடனேயே அவர்களை தலையணையில் படுக்க வைப்பது உண்டு. இது தவறான விஷயம்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையணையில் படுக்க வைப்பதை தவிர்ப்பது அவசியம்.


ஏன் குழந்தைகளுக்கு கூடாது? 
 குழந்தைகள் பிறந்த பின்னும் கூட, அவர்களின் உடல் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். குழந்தைகள் பிறந்த ஒரு சில மாதங்கள் வரை அவர்களின் தலை நேராக இருக்காது; குழந்தைகளின் தலை நிலைபெற குறைந்தது 3 மாதங்கள் ஆவது ஆகும். குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து என இரண்டு பாகங்களும் நிலைபெறும் வரை அவர்களுக்கு தலையணையை பயன்படுத்த கூடாது.



மற்றொரு காரணம்..!
 குழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது; பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் தலையணை சுத்தமானதாக இல்லை என்றாலோ அல்லது அதில் ஏதேனும் தூசி, அழுக்கு போன்ற விஷயங்கள் படிந்து இருந்தாலோ அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணங்களுமே குழந்தைகளுக்கு சற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடியவை!


பாதுகாப்புக்கு வைப்பவை..
 குழந்தைகளின் பாதுகாப்புக்கு வைக்கும் தலையணைகளோ அல்லது குழந்தை எங்கும் சென்று விடாமல் இருக்க அதன் பாதுகாப்பிற்காக வைக்கும் தலையணைகளோ எதுவாக இருந்தாலும் அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிரத்தை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு பயன்படுத்தும் சிறு சிறு விஷயங்களும் மிகச்சரியானதாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.



தலையணை வேண்டுமெனில்..!
 பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தலையணையை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அல்லது குழந்தைகளுக்கு தலையணை அவசியமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு மிகவும் தட்டையாக இருக்கும் தலையணை வகைகளாக பார்த்து வாங்கி கொடுக்க வேண்டும். தட்டையான தலையணைகள் தரையில் விரிக்கும் விரிப்பினை போன்று மிகவும் தட்டையானதாக இருக்க வேண்டியது அவசியம்.


மருத்துவ ஆலோசனை!
  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சரி எது தவறு என்பதை எப்பொழுதுமே மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்வது நல்லது. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மருத்துவ ஆலோசனைப்படி வாங்கி உபயோகித்து வருதல் நலம் அளிக்கும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான விஷயம் என்பதால், அதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளுதல் நல்லது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்



தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.


பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

(தொடர்ச்சி கீழே...)



இதையும் படிக்கலாமே !!!

தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.



இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.



பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.



செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.


பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும். இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும்.


உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள். உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.



ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.


டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம்.   

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts