வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Theft News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Theft News. Show all posts
Showing posts with label Theft News. Show all posts

Saturday, January 08, 2022

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?

சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சென்னை மாவட்ட செய்திகள் 


முந்தைய சென்னை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 30, 2021

உல்லாசம் அனுபவிக்க பூட்டிய வீடுகளுக்குள் புகுந்தவர் சிக்கினார்.!

சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, ஐசிஎப் அயனாவரம் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஜெபராஜ் போலீசில் சிக்கி இருக்கிறார்.


பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் கொள்ளையடித்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். சென்னை அயனாவரம் அடுத்த ஐசிஎப் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தூக்கி நிறுத்தி விட்டு ஓட தொடங்கியிருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்து உள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் ஸ்குரு டிரைவர், கத்தி , இரும், ராடு, சுத்தியல் போன்றவை இருந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். போலீசார் மேற்கொண்டு அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் 52 வயதான அந்த நபர் ஜெபராஜ் என்பதும், ஆட்சி என்பது பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கதவு உள்பக்கமாக பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது .

அயனாவரம் , அண்ணா நகர் அமைந்தகரை, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடங்கி கொள்ளையடித்து வந்திருக்கிறார் 2019 ஆம் ஆண்டில் இருந்து கோயம்பேடு , அண்ணா நகர் பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளையடித்து வழக்குகள் தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் அதற்கு பணம் தேவைப்படுகின்றது என்றுதான் கொள்ளையடித்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார் ஜெபராஜ். அவர் கொள்ளையடித்த நகைகளை இரண்டு நபரிடம் விற்று வந்திருக்கிறார். அவர்களிடம் இருந்து 90 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக தான் கொள்ளை அடிக்க ஆரம்பித்ததாகவும், அதுவே தொழிலாகி விட்டது என்று வெகு சாசாரணமாக சொல்லி இருக்கிறார் ஜெபராஜ்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, November 18, 2018

அரைமணி நேரம்தான், திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது!'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்



திருட்டு ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்களை அரைமணிநேரத்தில் யாரும் கண்டுபிடிக்காத முடியாதவகையில் மாற்றிவிடுவேன்' என்று ஏழாம் கிளாஸ் படித்த அப்துல் ரகுமான் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.  


செல்போன் திருட்டு என்பது சென்னையில் சர்வசாதாரணமாகிவிட்டது. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் `செல்போன் மாயம்' என்று போலீஸார் மனு ஏற்புச் சான்றிதழ் கொடுக்கின்றனர். புகார் கொடுத்தாலும் 90 சதவிகிதம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் சில நாள்கள் புலம்பிவிட்டு புதிய செல்போனை வாங்கியதும் தொலைந்துபோன செல்போனை மறந்துவிடுவதுண்டு. சென்னையில் செல்போன் திருட்டைத் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் செல்போன் திருடர்களுக்குக் கடிவாளம் போடமுடியவில்லை. இந்தச் சூழலில்தான் தி.நகர் துணை கமிஷனர் டாக்டர் கே.பிரபாகர் மேற்பார்வையில் எஸ்.ஐ.வெங்கடேசன் தலைமையிலான போலீஸ் டீம் துரிதமாகச் செயல்பட்டு திருட்டு செல்போன்களை சர்வசாதாரணமாக சென்னை பர்மா பஜாரில் விற்றுவந்த அப்துல்ரகுமானை கைது செய்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவரிடமிருந்து 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அப்துல்ரகுமானை எப்படிக் கைது செய்தோம் என்பதை நம்மிடம் விவரித்தனர். சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் திருட்டுப் போனதாக சமீபத்தில் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு செல்போனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஐபோன் புகாரைத் தவிர செல்போன் திருட்டு குறித்து புகார் கொடுத்தவர்களின் ஐஎம்இஐ நம்பர்களையும் நாங்கள் கண்காணித்துவந்தோம். இந்தச் சமயத்தில்தான் திருட்டுப்போன ஐபோனின் ஐஎம்இஐ நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது.


அந்த எஸ்.எம்.எஸ் மூலம் துப்பு துலக்க ஆரம்பித்தோம். எஸ்.எம்.எஸ். வந்த புதிய செல்நம்பரின் முகவரியைக் கண்டறிந்தோம். கொடுங்கையூரைச் சேர்ந்த அந்த நபரிடம் விசாரித்தபோது, பர்மா பஜாரில் அப்துல் ரகுமான் என்பவரிடம் ஐபோனை வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதனால், அப்துல் ரகுமானை ரகசியமாகக் கண்காணித்தோம். அவரிடம் ஏராளமான ஐபோன்கள் விலைஉயர்ந்த செல்போன்கள் இருந்தன. இதனால் வாடிக்கையாளரைப் போல அப்துல் ரகுமானிடம் ஒரு ஐபோனை விலைக்குக் கேட்டோம். அவருக்கு நாங்கள் போலீஸ் என்று தெரியாததால் ஐபோனுக்குரிய விலையைக் கூறினார். அது, மார்க்கெட்டைவிட குறைவாக இருந்தது. எப்படி உங்களால் மட்டும் குறைந்த விலைக்கு ஐபோனை விற்க முடிகிறது என்று கேட்டோம். அதற்கு அவர், ஐபோன் இந்த விலைக்கு வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள், தேவையில்லாதவற்றைப் பேச வேண்டாம் என்று கூறினார். அதன்பிறகு அவரிடம் ஐபோனை வாங்கியதோடு சைபர் கிரைம் போலீஸார் மூலம் அதை ஆய்வு செய்தோம். அப்போது அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் மாற்றியிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து மீண்டும் அப்துல் ரகுமானை விசாரணைக்காக அழைத்துவந்தோம். அவரின் கடையிலிருந்த 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன் மற்றும் செல்போன்களில் ஐஎம்இஐ நம்பர்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் ரகுமானை கைது செய்தோம்" என்றனர். செல்போன்கள் திருட்டுப்போனால் அதைக் கண்டுபிடிக்க ஒரே வழியாக போலீஸார் கருதுவது ஐஎம்இஐ நம்பர்தான். ஒவ்வொரு செல்போன்களுக்கும் ஒரு ஐஎம்இஐ நம்பர் இருக்கும். இரண்டு சிம்கார்டு பயன்படுத்தும் செல்போன் என்றால் அதற்கு இரண்டு ஐஎம்இஐ நம்பர்கள் இருக்கும். ஐபோன் போன்ற விலை உயர்ந்த செல்போன்களில் பாதுகாப்பு வசதிகள் அதிகம். அந்த ஐபோனில் உள்ள ஐஎம்இஐ நம்பர்களையும் அப்துல்ரகுமான் எளிதாக மாற்றியுள்ளார். இத்தனைக்கும் அவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்புதான். ஐஎம்இஐ நம்பர் மாற்றப்படுவது குறித்து அப்துல்ரகுமானிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது செயல்விளக்கம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்து போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் திருடப்படும் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், சாப்ட்வேரைப் பயன்படுத்தி முதலில் செல்போனின் லாக்கை திறப்பாராம். பிறகு, ஐஎம்இஐ மூலம் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்காமலிருக்க புதியதாக ஐஎம்இஐ நம்பரை டவுன்லோடு செய்வாராம். அதன்பிறகு யார் நினைத்தாலும் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்க முடியாதாம். அப்துல் ரகுமான் கையில் திருட்டு செல்போன் கிடைத்ததும் அரைமணி நேரத்தில் அது புதியபோனாக மாறிவிடும் என்கின்றனர் போலீஸார். ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோனை மிகக் குறைந்தவிலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், அதைப் புதிய போனாக மாற்றியபிறகு மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு விற்றுவிடுவாராம். இந்தவகையில் அவருக்கு அதிகளவில் வருமானம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் ஒருவர் திருட்டு லேப்டாப்களை புதியதாக மாற்றி விற்பதில் கில்லாடியாம். கைதான அப்துல்ரகுமானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


அப்துல் ரகுமானிடம் யார், யாரெல்லாம் திருட்டு செல்போன்களை விற்றார்கள், அதுபோல அவரிடம் செல்போன் வாங்கியவர்கள் யார் என்ற பட்டியலையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர். அதோடு அவரின் கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்துல்ரகுமானுக்கு உடந்தையாக சிலர் உள்ளனர். அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, November 09, 2018

சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி


சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

 
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அப்போது கையில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 அட்டை பெட்டிகளையும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.
மலேசியாவுக்கு...

அந்த நட்சத்திர ஆமைகளை கடல் வழியாக கடத்தி வந்த மர்மநபர்கள், அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts