வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-14
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 24, 2018

100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்



100 வயது முதிய பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.


மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண்  கற்பழிக்கப்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில்  பதிவாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.


மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சக்தாவில் கங்கா பிரசாத்பூர் கிராமத்திற்கு சென்ற அவிஜித் பிஸ்வாஷ் என்ற வாலிபர் அங்கு ஒரு அறையில் தனியாக இருந்த 100 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 
 அந்த முதிய பெண்ணின்   அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள்  வந்து உள்ளனர். வாலிபர் அவிஜித்  பாதிக்கப்பட்டவரின் படுக்கையின் கீழே மறைந்து இருந்து உள்ளார்.
உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்!

நடிகர் விஜய் எது செய்தாலும் அது டிரெண்டிங்காகி வருகிறது. சமீபத்தில் ரிலீஸான அவரது சர்கார் படத்தின் டீசர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் ஆனது. தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
                                      

இதனால் சர்கார் தொடர்பாக வெளியாகும் அனைத்து விஷயங்களும் தினம் தினம் வைரலாகி வருகிறது. எனவே அவரது ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.
mmm
இந்நிலையில் நடிகர் விஜய் குழந்தை ஒன்றை கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் இதனை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!
விஜய் கொஞ்சி மகிழும் அந்த குழந்தை யார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோ செம க்யூட்டாக இருக்கிறது என கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன
mmmm

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

(சோகம்) வேலைபளு மற்றும் நேரம் கடந்த வேலையினால் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் திரு.மேகநாதன் அகால மரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இள நிலை உதவியாளராக பணிபுரியும் திரு மேகநாதன் நேற்று இரவு 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். 

வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து இரவு நேரங்களில் காலதாமதமாக அனுப்பபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக இன்று மாவட்டஆட்சியகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பணியில் காலிப்பணிகளை நிரப்பாமல் உள்ளதால் ஒரே நபர் பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதால் அவரது அலுவலக நேரம் என்பது 8 மணி நேரத்தையும் தாண்டியும், விடுமுறை நாள் என்பதே என்னவென்று தெரியாமல் உள்ளதாலுமே இத்தகைய விபத்துகள் நடைபெறுகிறது. எனவே அரசாங்க பணியாளர்களின் நலன் காக்க அரசு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!



ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். 'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் மக்கள் வரை ஒவ்வொரு ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களையும் நம்மால் வகைப்படுத்த முடியும். அப்படியாக வகைப்படுத்தப்பட, ஒரு பொதுவான மூன்று பிரிவுகளில் ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களை பிரிக்கலாம்.

அது என்னென்ன வகை.? குறிப்பாக மூன்றாவது வகையினருக்கு என்ன சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் காத்திருக்ககின்றன என்பதை பற்றிய தொகுப்பே இது.!   (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
ஆன்லைன் பார்ன் 
 குடிபோதைக்கு அடிமை என்பதை குறிப்பிட்ட நபர் ஒரு சோசியல் ட்ரின்க்கரா.? பின்ஞ் (அதிகப்படியான) ட்ரின்க்கரா.? அல்லது குடிக்கும் அளவை பொறுத்த ட்ரன்க்கரா.? என்பதை பொறுத்தே அவர் எந்த அளவிற்கு குடிபோதை மிக்கவர் என்பதை விவரிக்க முடியும் அதே போலத்தான் ஆன்லைன் பார்ன் என்பதும்..



முதல் வகை
 ரிக்ரியேஷனல் வியூவர்ஸ் அதாவது பொழுதுபோக்கு பார்வையாளர்கள். இவ்வகையினர் எப்போதாவது ஆன்லைன் பார்ன் அணுகுவார்கள். அங்கு கொஞ்ச இங்கும் கொஞ்சம் என ஒரு வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆன்லைன் பாப்கார்ன் வலைத்தளங்களில் இவ்வகை பிரிவினர் நேரம் கழிப்பர்.


மென்காம ஆன்லைன் பார்ன் 
 பெரும்பாலும் இவ்வகை மக்கள் பாலியல் தூண்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் பார்ன் அணுகுவர், இதனால் இவர்கள் தங்களது சமூக காதல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் சந்திக்க மாட்டார்கள். ஆராய்ச்சிகளானது, இவ்வகை மக்கள் மென்காம ஆன்லைன் பார்ன் அணுகலில் ஈடுபட - மனித உடலில் சார்ந்த அறிவு மற்றும் தங்களின் இணை உடலின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி தான் மிக முக்கியமான காரணம் என்கிறது.



பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலை 
 பொழுதுபோக்கு பார்வையாளர் என்றாலும் கூட இவர்களும் பிற மக்களை ஒரு பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலையை விரைவில் பெறலாம் மற்றும் மிக எளிதாக முழுமையான ஆன்லைன் பார்ன் அடிமையாகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் வகை 
செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் என்ற வகையை சேர்ந்த ஆன்லைன் பார்ன் பார்வையாளர்கள் பொதுவாக பல ஆண்டுகளாக ஆபாச வலைதள அணுகலை கொண்டு இருப்பர் மற்றும் அவர்கள் ஆரம்பத்தில் பார்த்த ஆபாசப் படங்களும் இப்போது பார்க்கும் படங்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும்.


மனக்குழப்பம் என்றால் 
 விருப்பப்படியான தேர்வுகளில் ஆபாச வலைத்தள அணுகலை நிகழ்த்தும் இவ்வகையினர் தங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க ஆபாச படங்களை ஒரு வழியாக பயன்படுத்தும் மனநிலை கொண்டிருப்பர். எடுத்துக்காட்டுக்கு எதாவது சிக்கல், மனக்குழப்பம் என்றால் அதிலிருந்து தன்னைத்தானே விடுவிக்க பாப்கார்ன் அணுகலை நிகழ்த்துவர்.


சுய மருத்துவத்திற்கான ஒரு வழி
 இவர்கள் சந்தோஷமாக அல்லது வருத்தமாக, கோபமாக அல்லது வெறுனே வெறுப்பாக இருந்தாலும் கூட அதிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாக ஒரு சுய மருத்துவத்திற்கான ஒரு வழியாக கட்டாய ஆன்லைன் ஆபாச அணுகலை நிகழ்த்துவர். இந்த இணைய ஆபாச அணுகல்கள் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கு பதிலாக தவிர்க்க ஒரு வசதியான மலிவான வழியை வழங்குவதால் இவர்களும் விரைவில் ஆன்லைன் பார்ன் அடிமையாகிட வாய்ப்பு அதிகம்.



மூன்றாம் வகை 
 அட் ரிஸ்க் பார்ன் வியூவர்ஸ் எனப்படும் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆபாச பார்வையாளர்கள் என்ற வகையினர் வாடிக்கையாக தொடர்ந்து ஆபாச பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் போன்று இவர்கள் அலைக்கழிக்கும் போதெல்லாம் ஆன்லைன் பார்ன் அணுகல் நிகழ்த்தாவிட்டாலும் கூட ஒரு வலுவானஆன்லைன் பார்ன் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.


தனிமையான அல்லது மன அழுத்தத்துடனே
 இவ்வகை பிரிவினர் பெரும்பாலும் பல முறை இதை நிறுத்த முயற்சித்து தோற்றுபோனவராய் இருப்பர். முன்பை விட அதிக அளவிலான ஆன்லைன் பார்ன் உள்ளடக்கம் கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில் ஐந்து போதையை நிறுத்திக் கொள்வது என்பது பெரிய போராட்டமாக உணரும் இந்த வகையினர் தனிமையான அல்லது மன அழுத்தத்துடனே இருப்பர்.

பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் 
ஆன்லைன் பார்ன் என்பது தங்களது வாழ்க்கை திறனில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறதயே என்பதை இந்த வகையினர் நன்கு அறிந்திருப்பர், ஆனாலும் கூட இந்த பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் திணறுவர். இதற்கு காரணமாக அவர்களுடைய இணையுடன் மகிழ்ச்சியாக இல்லை அல்லது உண்மையான உடலுறவு மூலமாக திருப்தி அடைவில்லை என பல காரணங்களை தொகுக்கலாம். சரி இதிலுருந்து விடுபட மேலோட்டமான யோசனைகள் உண்டா என்று கேட்டால், ஆம் உண்டு.!


மாற்றம் சாத்தியமே.!
 1. உங்கள் கணினி/ மொபைலில் முன்பே சேமித்துள்ள ஆபாச வலைத்தளங்களி க்ளீன் செய்யுங்கள்.
 2. ஒரு இன்டர்நெட் சென்சார் அமைக்கவும். 
3. நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் உங்கள் இலவச நேரத்தை அதிகமாக செலவிடுங்கள்.
 4. எதிர்மறை எண்ணங்களுக்கு பதிலாக நேர்மறை எண்ணங்களுக்கான வலிமையை அதிகமாக பயன்படுத்தவும்.
 5. உடற்பயிற்சி, இசைக்கருவி என எதாவது ஒரு புதிய பழக்கம் அல்லது பொழுதுபோக்கை கையில் எடுங்கள்.
 6. சிக்கல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.



"குறிப்பாக" ஆண்ட்ராய்டில் ஆபாசப்படம் பார்க்க கூடாது, ஏன்.? 
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் அரங்கேறி கொண்டிருக்கும் சுச்சிலீக்ஸ் அசிங்கங்கள் பற்றி நான் உங்களுக்கு கூற வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு சுச்சிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் 'இண்டர்நெட் பார்ன்' (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை அணுகுவதில் ஏற்கனவே இந்தியா ஒரு 'மகத்தான இழுவை'யில் இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். எது எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம்.


ஆபாசப்படம்
 இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர் தந்திரங்களிலும் (குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது) நாம் சிக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய தொகுப்பே இது..!



காரணம் #1 
 சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions) நடைமுறை : பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

காரணம் #2
 பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.



காரணம் #3
 பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks). உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

காரணம் #4 
 ரான்சம்வேர்ஸ் (Ransomwares). ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!



மிகவும் அதிகம்
 இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக 'லாக்' செய்துவிடும், பின்பு அதை 'அன்லாக்' செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும். இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வலைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



எதிர்த்து பேச முடியாத "புருஷன்".. கோபக்கார "மனைவி".. ஒரு பரிதாப கொலை!



இது ஒரு புருஷன் பொண்டாட்டி கதை.. ஆனால் இவர்கள் மனிதர்கள் அல்ல, சிங்கங்கள். புருஷன், பொண்டாட்டி சண்டைக்கு சிங்கங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு ஒரு சிங்க ஜோடி இருந்தது. 8 வருஷமாக இந்த ஜோடி இந்த பூங்காவில்தான் இருக்கிறது. ஆண் சிங்கம் பெயர் நியாக், வயது 10. பெண் சிங்கம் பெயர் ஜூரி, வயது 12. இந்த ஜோடிக்கு 3 குட்டிகள் உள்ளன.

பேமஸ் ஜோடி 
 இந்த பூங்காவிலேயே இந்த சிங்க ஜோடிதான் ரொம்ப ஃபேமஸ். ஆனாலும் சில மாதங்களாகவே இதுங்களுக்குள் சண்டை இருந்து வந்தது. எதற்காக சண்டை என்று யாருக்கும் தெரியாது. எவ்வளவு சண்டை போட்டுக்கிட்டாலும் ரெண்டுமே ஒரே கூண்டில்தான் இருக்கும். ஆனால் எப்ப பார்த்தாலும் புர்... புர்... என்று மோதியபடி இருக்குமாம்.   (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

இறுக்கி பிடித்தது 
 அதேபோலதான், சம்பவத்தன்றும் கூண்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. ஆனால் இந்த கர்ஜனை சத்தம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. இதனை கேட்ட அங்கிருந்த ஊழியர் ஒருவர் ஓடிச் சென்று பார்த்தார். அப்போது பெண் சிங்கம், ஆண் சிங்கத்தின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. இரு சிங்கங்களையும் பிரித்து விட பல முயற்சிகள் நடந்தது.



அமைதி சிங்கம்
 ஆனால் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை விடவே இல்லை. கெட்டியாக கழுத்தை பிடித்து கொண்டது. இதில் ஆண் சிங்கம் நியாக்கிற்கு மூச்சு திணறி விட்டது. கடைசியில் ஜூரியிடம் தப்ப முடியாமல் நியாக் இறந்தே விட்டது. பொதுவாக காட்டில் ஆண் சிங்கம்தான் டாமினேட் பண்ணும். பெண் சிங்கங்கள் பெரும்பாலும் அமைதியாகவே இருக்குமாம். ஆனால் இங்கு தலைகீழாக போய் விட்டது.


பரிதாபத்தில் பூங்கா
 இதுபற்றி பூங்கா ஊழியர்கள் கூறும்போது, நியாக் ரொம்ப நல்ல டைப் என்கிறார்கள். அற்புதமான சிங்கமாம். எவ்வளவோ தடுத்தும் எங்களால் நியாக்கை காப்பாற்ற முடியாமல், இப்படி இழந்துவிட்டு நிற்கிறோம். இதனால் இந்த பூங்காவே சோகத்தில் உள்ளது என்கிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts