Run World Media: 11/18/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 18, 2018

[முக்கிய செய்தி] தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும்தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்காங்கே போராடுவதால் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக் - New Java Bike like Bullet Styleஇந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன.  புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள்  வர இருப்பதால், பெரும்  எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற  மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.  இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை  பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில், ஜாவா நிறுவனத்தின் 293சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் என  கருதப்படுகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பியூயல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக  இன்ஜின் என கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. இது, பழைய ஜாவா மோட்டார்சைக்கிள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது.


இந்த இன்ஜின் நடுத்தர நிலையில், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோக் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும்  என்பது ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இப்புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட  உள்ளது. இது, இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நிச்சயம் நேரடி போட்டியை கொடுக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


[வேலைவாய்ப்பு] இந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.!


இன்டெல் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது வடிவமைப்பு மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கிறார்கள். இதற்காக ரூ.1,100 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது இண்டெல் நிறுவனம்.

பெரிய முதலீடு 
இது அமெரிக்காவுக்கு வெளியே இன்டெல் மேற்கொள்ளும் அதிக பட்ச முதலீடு. இண்டெல் நிறுவனத்துக்கு இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூருவில் அமைக்கும் இரண்டாவது வடிவமைப்பு மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

எவ்வளவு பெரிது 
பெங்களூருவில் 44 ஏக்கர் பரப்பளவில் 6,20,000 சதுர அடியில் இந்த வடிவமைப்பு மையம் அமைய இருக்கிறது. 1,00,000 சதுர அடிக்கு உலகத் தரத்திலான ஆய்வக கட்டமைப்பும் வர இருப்பது தான் சிறப்பு.

சொல்லவில்லை 
இந்த மையத்துக்கு எத்தனைப் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளார்கள், எங்கிருந்து ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். இந்தியர்களை அதிக அளவில் எடுப்பார்களா... அல்லது முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்து இறக்க இருக்கிறார்களா என்று எந்த விஷயத்தையும் இண்டெல் தெரியப்படுத்தவில்லை.

இந்தியத் தலைவர் 
இண்டெல் நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் டேட்டா செண்டரின் துனைத் தலைவரான நிவ்ருதி ராய் "இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இண்டெல் நிறுவனம் தன்னை தயார் படுத்தி வருகின்றது. இதற்கான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் என இண்டெல் தனது பிரமாண்ட விரிவாக்கத்தினை மேற்கொள்கிறது. குறிப்பாக கிளவுட் சேவை, 5ஜி தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence என பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது என்றார்.

கண்டுபிடிப்புகள் 
அதிகரிக்கும் எங்கள் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளால் இந்தியாவில் கண்டுபிடிக்கும் கலாச்சாரம் அதிகரிக்கும். அதோடு இந்த நாட்டை டெக்னாலஜி துறையில் முன்னெடுத்துச் செல்வதையும் உறுதிப்படுத்தும் என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தமிழகத்தை தாக்க இருக்கும் அடுத்தடுத்து புதிய 2 புயல்கள் சென்னை வானிலை மையம் அறிவிப்புகடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலிலில் உருவான குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த கஜா புயல் இன்று( வெள்ளி கிழமை) காலை 9:30 மணி அளவில் அதிராம்பட்டினம் அருகே கரையை கடந்தது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் அடுத்து அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது. தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியார்களிடம் கூறியதாவது

கஜா புயல் காலை 11 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது இதனையடுத்து தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
மீனவர்கள் இன்று மதியம் முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம். நவ.18 முதல் 20-ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

என்று செய்தியாளர்களிடம் கூறினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


அரைமணி நேரம்தான், திருட்டு ஐபோன் அடையாளமே தெரியாது!'-`ஏழாம்கிளாஸ்' அப்துலின் அதிர்ச்சி வாக்கு மூலம்திருட்டு ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் ஐஎம்இஐ நம்பர்களை அரைமணிநேரத்தில் யாரும் கண்டுபிடிக்காத முடியாதவகையில் மாற்றிவிடுவேன்' என்று ஏழாம் கிளாஸ் படித்த அப்துல் ரகுமான் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.  


செல்போன் திருட்டு என்பது சென்னையில் சர்வசாதாரணமாகிவிட்டது. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் `செல்போன் மாயம்' என்று போலீஸார் மனு ஏற்புச் சான்றிதழ் கொடுக்கின்றனர். புகார் கொடுத்தாலும் 90 சதவிகிதம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை. செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் சில நாள்கள் புலம்பிவிட்டு புதிய செல்போனை வாங்கியதும் தொலைந்துபோன செல்போனை மறந்துவிடுவதுண்டு. சென்னையில் செல்போன் திருட்டைத் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் செல்போன் திருடர்களுக்குக் கடிவாளம் போடமுடியவில்லை. இந்தச் சூழலில்தான் தி.நகர் துணை கமிஷனர் டாக்டர் கே.பிரபாகர் மேற்பார்வையில் எஸ்.ஐ.வெங்கடேசன் தலைமையிலான போலீஸ் டீம் துரிதமாகச் செயல்பட்டு திருட்டு செல்போன்களை சர்வசாதாரணமாக சென்னை பர்மா பஜாரில் விற்றுவந்த அப்துல்ரகுமானை கைது செய்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அவரிடமிருந்து 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அப்துல்ரகுமானை எப்படிக் கைது செய்தோம் என்பதை நம்மிடம் விவரித்தனர். சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் திருட்டுப் போனதாக சமீபத்தில் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பரைக் கொண்டு செல்போனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஐபோன் புகாரைத் தவிர செல்போன் திருட்டு குறித்து புகார் கொடுத்தவர்களின் ஐஎம்இஐ நம்பர்களையும் நாங்கள் கண்காணித்துவந்தோம். இந்தச் சமயத்தில்தான் திருட்டுப்போன ஐபோனின் ஐஎம்இஐ நம்பரிலிருந்து எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது.


அந்த எஸ்.எம்.எஸ் மூலம் துப்பு துலக்க ஆரம்பித்தோம். எஸ்.எம்.எஸ். வந்த புதிய செல்நம்பரின் முகவரியைக் கண்டறிந்தோம். கொடுங்கையூரைச் சேர்ந்த அந்த நபரிடம் விசாரித்தபோது, பர்மா பஜாரில் அப்துல் ரகுமான் என்பவரிடம் ஐபோனை வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதனால், அப்துல் ரகுமானை ரகசியமாகக் கண்காணித்தோம். அவரிடம் ஏராளமான ஐபோன்கள் விலைஉயர்ந்த செல்போன்கள் இருந்தன. இதனால் வாடிக்கையாளரைப் போல அப்துல் ரகுமானிடம் ஒரு ஐபோனை விலைக்குக் கேட்டோம். அவருக்கு நாங்கள் போலீஸ் என்று தெரியாததால் ஐபோனுக்குரிய விலையைக் கூறினார். அது, மார்க்கெட்டைவிட குறைவாக இருந்தது. எப்படி உங்களால் மட்டும் குறைந்த விலைக்கு ஐபோனை விற்க முடிகிறது என்று கேட்டோம். அதற்கு அவர், ஐபோன் இந்த விலைக்கு வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள், தேவையில்லாதவற்றைப் பேச வேண்டாம் என்று கூறினார். அதன்பிறகு அவரிடம் ஐபோனை வாங்கியதோடு சைபர் கிரைம் போலீஸார் மூலம் அதை ஆய்வு செய்தோம். அப்போது அந்த ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் மாற்றியிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து மீண்டும் அப்துல் ரகுமானை விசாரணைக்காக அழைத்துவந்தோம். அவரின் கடையிலிருந்த 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன் மற்றும் செல்போன்களில் ஐஎம்இஐ நம்பர்கள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் ரகுமானை கைது செய்தோம்" என்றனர். செல்போன்கள் திருட்டுப்போனால் அதைக் கண்டுபிடிக்க ஒரே வழியாக போலீஸார் கருதுவது ஐஎம்இஐ நம்பர்தான். ஒவ்வொரு செல்போன்களுக்கும் ஒரு ஐஎம்இஐ நம்பர் இருக்கும். இரண்டு சிம்கார்டு பயன்படுத்தும் செல்போன் என்றால் அதற்கு இரண்டு ஐஎம்இஐ நம்பர்கள் இருக்கும். ஐபோன் போன்ற விலை உயர்ந்த செல்போன்களில் பாதுகாப்பு வசதிகள் அதிகம். அந்த ஐபோனில் உள்ள ஐஎம்இஐ நம்பர்களையும் அப்துல்ரகுமான் எளிதாக மாற்றியுள்ளார். இத்தனைக்கும் அவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்புதான். ஐஎம்இஐ நம்பர் மாற்றப்படுவது குறித்து அப்துல்ரகுமானிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது செயல்விளக்கம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்து போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் திருடப்படும் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், சாப்ட்வேரைப் பயன்படுத்தி முதலில் செல்போனின் லாக்கை திறப்பாராம். பிறகு, ஐஎம்இஐ மூலம் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்காமலிருக்க புதியதாக ஐஎம்இஐ நம்பரை டவுன்லோடு செய்வாராம். அதன்பிறகு யார் நினைத்தாலும் திருட்டு செல்போனைக் கண்டுபிடிக்க முடியாதாம். அப்துல் ரகுமான் கையில் திருட்டு செல்போன் கிடைத்ததும் அரைமணி நேரத்தில் அது புதியபோனாக மாறிவிடும் என்கின்றனர் போலீஸார். ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோனை மிகக் குறைந்தவிலைக்கு வாங்கும் அப்துல்ரகுமான், அதைப் புதிய போனாக மாற்றியபிறகு மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு விற்றுவிடுவாராம். இந்தவகையில் அவருக்கு அதிகளவில் வருமானம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் ஒருவர் திருட்டு லேப்டாப்களை புதியதாக மாற்றி விற்பதில் கில்லாடியாம். கைதான அப்துல்ரகுமானை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.


அப்துல் ரகுமானிடம் யார், யாரெல்லாம் திருட்டு செல்போன்களை விற்றார்கள், அதுபோல அவரிடம் செல்போன் வாங்கியவர்கள் யார் என்ற பட்டியலையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர். அதோடு அவரின் கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்துல்ரகுமானுக்கு உடந்தையாக சிலர் உள்ளனர். அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்