வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-03-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 20, 2019

வேலை வாய்ப்பு - நீங்க பி.இ பட்டதாரியா? ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.04.2019

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!
 
நிர்வாகம் :  

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட் 

மேலாண்மை :  

மத்திய அரசு

பணி :  

பொறியாளர் (இரசாயணம்)

மொத்த காலிப் பணியிடங்கள் : 41  

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்  

வயது வரம்பு :  

01.02.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி :  

பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை :  

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.700. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

கட்டணம் செலுத்தும் முறை :  

ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :  

www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி  08.04.2019

வேலை வாய்ப்பு - சென்னையிலேயே மத்திய அரசு வேலை..! ஊதியம் எவ்வளவு தெரியுமா? - விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2019

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


நிர்வாகம் :  

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்

மேலாண்மை :  

மத்திய அரசு 

பணி : 

ஸ்டெனோகிராபர் 

காலிப்பணியிடங்கள் : 20

 பணியிடம் : 

சென்னை கல்வித் 

தகுதி :  

12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

18 முதல் 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

பணி : 

அப்பர் டிவிசன் கிளார்க்

காலிப் பணியிடங்கள் : 131

பணியிடம் :  

சென்னை 

கல்வித் தகுதி : 

50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

18 முதல் 33 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் .

ஊதியம் : ரூ. 25,500 

தேர்வு முறை :  

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 

விண்ணப்பிக்க கடைசி தேதி :  

15.04.2019 
விண்ணப்பிக்கும் முறை :  

https://ibpsonline.ibps.in/esicsucmar19/ என்னும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரிலுள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு நேற்று இரவு நிறைமாத கர்ப்பிணி பொம்மி என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால், அப்போது மருத்துவர் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கே பணியிலிருந்த செவிலியர்கள் பேறுகாலம் பார்த்துள்ளனர். சுக பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.


குழந்தையும் வெளியேவர ஆரம்பித்தது. ஆனால், அனுபவம் இல்லாத செவிலியர்கள், குழந்தையின் தலையை தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர். இதனால் அந்த சிசு பரிதாபமாக பலியானது. இதனிடையே பொம்மியின் உடலுக்குள் மாட்டிக்கொண்ட, குழந்தையின் உடல்பகுதியை போராடி மீட்ட செவிலியர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பொம்மியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார், 30 கிராம, மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாத நிலை நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, March 19, 2019

நடுரோட்டில் நடனம் ஆடிய ஸ்ரேயா

தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.





நடிகைகள் தங்களுக்கு பிடித்த வி‌ஷயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா. 
சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Monday, March 18, 2019

தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் மெழுகு சிலை

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.





இந்நிலையில் அவரது மெழுகுச்சிலையை திறந்து வைக்க, காதல் கணவர் ரன்வீர் சிங் மற்றும் தனது குடும்பத்தினருடன் லண்டன் பறந்து சென்றார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதையடுத்து தனது குடும்பத்தினர் முன்னிலையில் தனது மெழுகுச்சிலையை தீபிகா படுகோனே திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.


வெள்ளை உடையில் அந்த அழகான மெழுகுச்சிலையை பார்த்து ரசித்த தீபிகா, இதனை உருவாக்கியவரிடம் நான் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு, மீண்டும் அடுத்த முறை நீங்கள் வரும் வரை உங்கள் ஞாபகங்களாய் இந்த அழகு நிறைந்த மெழுகு சிலை இங்கே இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தீபிகா அருகில் அந்த சிலை நிற்பதை பார்த்து இரட்டை சகோதரிகள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவலாகி வருகிறது.

வேலை வாய்ப்பு - தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.03.2019

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், மசால்ஜி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இப்பணியிடத்திற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு உடனடியாக விண்ணப்பித்து பயனடையுடங்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நிர்வாகம் :  

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றம் 

மேலாண்மை :  

தமிழக அரசு

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

அலுவலக உதவியாளர் - 23 
இரவுக்காவலர், மசால்சி - 07 
துப்புரவு பணியாளர் - 01 

ஊதியம் :

ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்


சுருக்கெழுத்து  தட்டச்சர் நிலை-II - 07
கணினி ஆப்ரேட்டர் - 01

ஊதியம் :  

ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரையில் 

கல்வித் தகுதி :  

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என சம்மந்தப்பட்ட கல்விக்கு தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  

அஞ்சல் மூலமாக 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி


20.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் 
விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/notification என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை

கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


இந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

ஹெட்போன் தீமைகள் | Headphone Problem in wearing

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.







இசைக்கு மயங்காத உயிரினங்கள் உலகில் இல்லை. இனிமையான இசை கேட்பதால் வாழ்நாள் கூடும் என்பதோடு பல்வேறு நோய் தீர்க்கும் காரணியாகவும் இசை இருந்து வருகிறது. ஆனால் அதுவே அளவை மிஞ்சிவிட்டால் நஞ்சாகி விடும்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது சகஜமாகி விட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் இசை மயம்தான். சிலர் அலுவலகங்களில் பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்கிறார்கள். வீட்டில் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்கவும், ஹெட்போன்களை பயன்படுத்துவோர் ஏராளம்.




அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் ஹெட்போன் பயன்பாடு அளவோடு இருத்தலே நலம். காதிற்குள் 90 டெசிபல் அளவுக்கு ஒலியை ஹெட்போன் அனுப்புவதால் காது கேளாமைக்கு காரணமாகிறது. 5 நிமிடம் இடைவிடாமல் 100 டெசிபல் ஒலியை கேட்டால் மிகவும் சிரமம். பிறர் பயன்படுத்தும் ஹெட்போனை எடுத்து தயங்காமல் மாட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தால், காது சார்ந்த தொற்றுநோய்கள் தாக்கக்கூடும். மேலும் ஹெட் போன் காதிற்குள் காற்று புகுதலை தடுத்து விடுகிறது.

இனிமையான இசை இன்பத்தை தரும். ஆனால் பல செவி பிரச்சினைகளுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும். ஹெட்போன் உபயோகித்தபடி வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவோரும் அதிகம். மாணவ- மாணவிகள் படிக்கும்போது இசை கேட்பது அபாயகரமானது. இது மூளைக்கு வேலை பளுவை அதிகரித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

மராட்டியத்தில் தண்டவாளம் அருகே பப்ஜி விளையாடியபடி சென்ற 2 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பலி

மராட்டியத்தில் ரயில் தண்டவாளத்தையொட்டி பப்ஜி விளையாடியபடி சென்ற 2 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.





மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில், பப்ஜி விளையாடியபடி ரயில் தண்டவளத்தை ஒட்டி சென்ற இரண்டு இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:- 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நாகேஷ் கோரே (24) அன்னபுர்னே ( 22) ஆகிய இரண்டு இளைஞர்களும் பப்ஜி விளையாடிபடி ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். 
அப்போது எதிர்பாராதவிதமாக ஐதராபாத் - ஆஜ்மீர் ரயிலில் இருவரும் அடிபட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 

உள்ளூர் மக்கள் இளைஞர்கள் உடல் ரயில் தண்டவாளம் அருகே கிடந்ததை கண்டு தகவல் அளித்தனர். இதன்பேரில் இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக இணைந்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி சமீப காலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருகிறது. தென்கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு வன்முறை சிந்தனையை அதிகரிப்பதாக பரவலாக புகார்கள் எழுப்பப்படுகிறது.

Sunday, March 17, 2019

அன்று எம்.ஜி.ஆருக்கு கார் ஓட்டுனர்! இன்று பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட நபர்... சடலத்தை கூட வாங்காத கல்நெஞ்சம்



தமிழகத்தில் சாலையில் வீசப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை வாங்க பிள்ளைகள் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் உள்ள பூங்காவில் கடந்த 20 நாட்களாக பாஸ்கரன் (80) என்ற முதியவர் சுட்டெரிக்கும் வெயிலில் அனாதையாக படுத்திருந்த நிலையில் நேற்று மயங்கி விழுந்தார். பாஸ்கரன் குறித்து விசாரித்த போது அவர் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு குப்பம்மாள் என்ற மனைவி, 4 மகன்கள் உட்பட 5 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.


இதோடு பாஸ்கரன் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் முன்னர் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரியவந்தது. சாலையில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் குறித்து அவர் பிள்ளைகளுக்கு தகவல் தரப்பட்டும் அவர்கள் யாரும் தந்தையை மீட்க வரவில்லை.


இதையடுத்து உடல்நிலை மோசமான பாஸ்கரனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பொலிசார் அவர் பிள்ளைகளுக்கு தகவல் தந்த நிலையில் நாங்கள் வரமாட்டோம். எங்களை விட்டுவிடுங்கள் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டனர்.


தந்தை இறந்த செய்தி கேட்டும் சிறிதும் கவலைப்படாத கல்நெஞ்சம் படைத்த இவர்களிடம் போனில் பொலிசார் உங்களுக்கும் இதேப்போல் நிலை ஏற்படும் எனக்கூறியுள்ளனர்.
இதையடுத்து, பொலிசாரே தங்களது செலவில் முதியவரின் சடலத்தை அடக்கம் செய்தனர். இதனிடையில் தந்தை சடலத்தை கூட வாங்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

ஓவியா நடித்த "A" படம்.! காரி துப்புய ரசிகர்கள்.!! பழத்தை ருசிக்கமா... ஓவியா அய்யோ, அம்மா, விளக்கம்.!!



களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு இந்த படங்களுக்கு பின்  பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனையெடுத்து, அவர் நடிக்கும் படங்களை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டபின் இதுவரை அவரின் எந்தப்படமும் வெளியாகவில்லை.


அவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடிகை ஓவியா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது குறித்து நடிகை ஓவியா மனவேதனையுடன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ''எனது ரசிகர்கள், என்னை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம்.


சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள்'' என்று பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது வெளியான 90 எம்எல் திரைப்படத்தின் ஒரே ஒரு ட்ரைலரில் தனது மொத்த நல்ல பெயரையும் கெடுத்து கொண்டு உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ள ஒரு மோசமான கலாச்சாரமான 'அடல்ட்' திரைப்படங்கள் அதிகம் வரத் தொடங்கி உள்ளது.


குறிப்பாக சொல்லவேண்டும் ''திரிஷா இல்லனா நயன்தாரா'' அந்த திரைப்படத்திற்குப் பின் ''ஹரஹர மகாதேவகி'', ''இருட்டு அறையில் முரட்டு குத்து'' போன்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் அதிகப்படியான இரட்டை அர்த்தங்கள் என்றுகூடக் கூற முடியாத அளவிற்கு, நேரடி ஆபாச வசனங்கள் மூலம் திரைக்கதை ஆக்கப்பட்டு, அந்தப் திரைப்படங்கள் வெற்றியும் கண்டுள்ளது.


இதனை தொடர்ந்து அதுபோன்ற அடல்ட் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அப்படியாக வெளிவர உள்ள ஒரு திரைப்படம்தான் ''90 எம் எல்''. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் நடிகை ஓவியா சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, குடித்துவிட்டு ஆட்டம் ஆடுவது மற்றும் அந்த மாதிரியான விஷயங்களை வெளிப்படையாகவே தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது என்று காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது.


இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலருக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி (ராணுவம்) என்று இருந்த ரசிகர்கள் கூட இன்று ஓவியாவை கழுவி கழுவி திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழ் திரைப்படங்கள் ஆபாசங்களுக்கு பஞ்சமில்லாமல் படத்தின் டைட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் பார்க்கக் கூடியது என்று வரக்கூடும்.


இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய திரைப்படம் குறித்து நடிகை ஓவிய தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''ஒரு பழத்தை சுவைக்கும் முன், அதன் விதையின் தரத்தை தீர்மானிக்காதீர்கள். காத்திருங்கள் இந்த 'A' (ADULT) திரைப்படத்தை காண'' என்று புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
பொதுவாக சொல்லவேண்டுமானால், தமிழ் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் இதனை அனைத்தும் மறந்து ஆபாச சிந்தனையில் தள்ளப்பட்டு, வருங்கால சந்ததிகள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள், பள்ளி மாணவர்களின் மனநிலை கெட்டுப் போகக்கூடிய அபாயம் இது போன்ற திரைப்படங்களால் ஏற்பட்டுள்ளது.