வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-03-24
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, March 30, 2019

நீங்கள் எந்த வங்கியாக இருந்தாலும் சரி.. உங்கள் மொபைல் தேடி பேலன்ஸ் விவரம் வரும் எப்படி தெரியுமா?



இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

indian bank balance check number : நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.


இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

ஐசிஐசிஐ வங்கி :

நீங்கள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 022 30256767 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.


இன்னும் 2 நாட்கள் தான்.. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வீணாக அலையாமல் இதைப்படிங்க!

கனரா வங்கி :

நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092892 92892 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ் உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.


இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

இராமாபுரம் சாலையில் காவு வாங்கும் வேகத்தடை (Speed Break) - விவரம் உள்ளே | Ramapuram Speed Break




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் to வந்தவாசி சாலையில் உள்ளது. இப்பகுதியில் 5 வேகத்தடைகள் உள்ளன. அதிக வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.


காரணம் என்னவெனில், வேகத்தடையின் மேல் வெள்ளைபூச்சு பூசப்படாமலும்,  பிரதிபளிப்பான்கள் (Reflection) இல்லை. நெடுஞ்சாலை துறையினர் மூலம் தண்ணியான சுண்ணாம்பு நீர் போல உள்ள திரவியத்தை ஸ்பாஞ்ச் மற்றும் பெயின்ட் பிரஷ்களை கொண்டு பூசிவிட்டு கணக்கு காண்பிப்பதற்கு மட்டும் புகைப்படம் எடுத்துச்செல்லப்படும். பின்னர் மறுநாள் காலை பார்த்தால் அந்த திரவியம்கூட மிஞ்சாது. இரவில் பெய்யும் பனியிலேயே கரைந்து ஓடிவிடும். மேற்கண்ட புகைப்படத்தில் பார்த்தாலே தெரியும் இந்த வேகத்தடையின் நிலை.



சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களின் நிழல் காரணமாக அந்த தற்காலிக வெள்ளைபூச்சுகள் சுத்தமாக தெரியாத காரணத்தினால் வாகனங்கள் அந்த வேகத்தடைகள் மீது (Speed Break) வேகமாக ஏறி இறங்கி இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர்.  ஆம்புலன்ஸ் செல்லும் போதும் உள்ளிருக்கும் நோயாளிகளும் உடன் சென்றவர்களும் கீழும் மேலும் விழுந்துகொண்டு செல்கின்றனர்.



எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு நிலையான வெள்ளை பூச்சு மற்றும் பிரதிபளிப்பான் (Refection) அமைக்கப்படுமா....? இந்த சாலையினை போட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...? இதனை மேற்பார்வையிட்டு கையெழுத்திட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.

கணவனை பிடிக்காமல் தாய்வீட்டிற்கு வந்த இளம்பெண்!! அக்கா என்று கூட பாராமல் தம்பி செய்த காரியத்தை பாருங்க....!



நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சார்ந்தவர் மணிவண்ணன். பொறியியல் படித்த மகளும், பாலிடெக்னிக் படிக்கும் மகனும் இருந்துள்ளனர். மணிவண்ணனின் மகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஏர்வாடி பகுதியை சார்ந்த லெனின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.


இந்தநிலையில், திருமணம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே கணவர் பிடிக்கவில்லை என்று தந்தை வீட்டிற்கு திருப்பியுள்ளார்  மணிவண்ணனின் மகள். அவர் வீட்டுக்கு வந்த மறுதினம் அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த  மணிவண்ணனின் மகளை அவரது சகோதரன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான்.


கொலைசெய்துவிட்டு மணிவண்ணனின் மகன் சுந்தரபாண்டியன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். காவல்நிலையத்திற்கு அரிவாளுடன் வந்த சுந்தரபாண்டியை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர். மேலும் அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றி பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.


போலீசார் நடத்திய விசாரணையில், தனது அக்காவிற்கு கடந்த மாதம் தான் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. அவரின் கணவரான லெனின் லாரி ஓட்டுநர் என்பதை அறிந்தே திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறினார். மீண்டும் அவரிடம் பேசி கணவருடன் சேர்த்து வைத்த 10 நாட்களில் மீண்டும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று வீட்டிற்கு வந்துவிட்டார்.


எனது அக்கா அவரு செய்ததால் எண்களாக குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுந்தர பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Friday, March 29, 2019

போன் போட்டு பேசிய ஹன்சிகா: ஓகே சொன்ன சிம்பு

மஹா படத்தில் சிம்பு எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மஹா. 


ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்பு எப்படி அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.


சிம்பு  

ஹன்சிகா தான் சிம்புவுக்கு போன் செய்து மஹா படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். ஹன்சிகா கேட்டதும் சிம்பு சரி என்று கூறியுள்ளார். சிம்புவின் கதாபாத்திரம் வெயிட்டானது என்று கூறப்படுகிறது.


கதாபாத்திரம்  

முதலில் சில நிமிடங்கள் மட்டுமே வருவதாக இருந்ததாம் சிம்புவின் கதாபாத்திரம். ஆனால் சிம்பு நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் 30 நிமிடங்கள் வரும் வகையில் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.


நடிப்பு 

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. காதல் முறிந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றார்கள். அதன்படி நட்பின் அடிப்படையில் ஹன்சிகாவின் படத்தில் நடிக்கிறாராம் சிம்பு.


மஹா  

மஹா பட போஸ்டர்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் முன்னாள் காதல் ஜோடி மீண்டும் சேர்ந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்ககியது தேர்தல் ஆணையம் விவரம் உள்ளே



தினகரன் கட்சி அ.ம.மு.க விற்கு  பரிசுப்பெட்டி சின்னம் (Gift Box) பொதுச் சின்னமாகத் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுப்பெட்டி சின்னத்தை மிகவும் சுலபமாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும் என்று முழு நம்பிக்கையுடன் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள்.

Thursday, March 28, 2019

காலுடன் கபாலத்தை காவு வாங்கிய ஸ்மார்ட்போன்.! உஷார் மக்களே உஷார்.!


இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் உள்ளனர், அதே போல் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியாக வெடிக்கும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தான் அதிகம் நடந்தேறி வருகிறது. 



அதேபோல் தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


பேண்ட் பாக்கெட்டில் ஒப்போ வெடித்தது  

ஹைதராபாத் பகுதியில் உள்ள 28 வயது தக்க ஒரு இளைஞரின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன், அவரின் பேண்ட் பாக்கெட்டில் வெடித்துள்ளது. இந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



எம்.டி இம்ரான்  

எம்.டி இம்ரான் என்ற இந்த இளைஞர் அல்வாள் பகுதியில் எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும் வழியில், அவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவருடைய புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியுள்ளது.


தலை மற்றும் கண்களிலும் பலத்த காயம்  

அவருடைய ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதனால், அவரின் கால்களில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த வேளையில் ஸ்மார்ட்போன் வெடித்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரின் தலை மற்றும் கண்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.


ஸ்மார்ட்போன் அதிகப்படியாகச் சூடானது தான் காரணம் 

சம்பவ இடத்திலிருந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த ஸ்மார்ட்போன் அதிகப்படியாகச் சூடானது தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு  

இச்சம்பவம் தொடர்பாக இம்ரான் ஒப்போ நிறுவனம் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன் விற்பனை செய்த ரீடைல் கடையின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.



சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களுக்கு தடை 

ஓவர் ஹீட் மற்றும் ஓவர் சார்ஜிங்கினால் ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவம் அதிகமாக இந்தியாவில் நடந்தேறி வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிகம் வெடித்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 7 என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஸ்மார்ட்போன் சூடான தூரமா வச்சுடுங்க, பாக்கெட்டில மட்டும் வச்சுடாதீங்க மக்களே! உஷார்.


Wednesday, March 27, 2019

சென்னைக்கு இதற்காக தான் வந்தோம்: வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்



கவரிங் நகைகளை மாற்றி அதற்கு பதிலாக தங்கநகைகளை சென்னையில் தான் எளிதாக பெறமுடியும் என்பதற்காகவே சென்னை வந்தோம் என இளம் பெண் உட்பட ஒரு கும்பல் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளது.


சென்னை தண்டையார்பேட்டையில் நவரத்தன்சிங் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடந்தி வரும் நிலையில் அங்கு 25 வயதான இளம் பெண்ணும், 50 வயதான நபரும் வந்தனர். பின்னர் தங்களிடம் பழைய தங்கக் கம்மல் இருப்பதாகவும் அதற்கு பதிலாக தங்க செயின் வேண்டும் என்றும் கூறினர்.


இதையடுத்து அங்கிருந்த 6 கிராம் எடையுள்ள தங்கநகையை அவசரமாக தேர்வு செய்து எடுத்துகொண்ட நிலையில் அதற்கு பதிலாக 7 கிராம் எடையுள்ள கம்மல்களை அப்பெண் கொடுத்தார். பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக கிளம்பிய நிலையில், கடை ஊழியர்கள் சந்தேகமடைந்து கம்மலை சோதித்தனர்.
அப்போது அது கவரிங் என தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் டெல்லியைச் சேர்ந்த கிசன்லால் (69) என்பவர் சிக்கினார். விசாரணையில், அவர் டெல்லியிலிருந்து குடும்பத்தோடு வந்து, கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.


அவர் கொடுத்த தகவலின்படி அவரின் மகன் சஞ்செய் மற்றும் உறவினர்கள் சோனுகுமார், அவரின் மனைவி லதா ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில், தமிழகத்தில் தான் அதிகளவில் நகைகளை அணிவார்கள் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்ததும், மேலும் சிலரை இதே போல ஏமாற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.


கொள்ளைக் கும்பல் அளித்த வாக்குமூலத்தில், சென்னையில் தான் கவரிங் நகைகளை எளிதில் மாற்ற முடியும் என்றுதான் இங்கு வந்தோம். கொண்டு வந்த நகைகள் அனைத்தையும் மாற்ற நினைத்தோம், ஆனால் அதற்குள் பொலிசார் பிடித்துவிட்டனர் என கூறியுள்ளனர்.

பள்ளிக்கு பறந்து செல்லும் மாணவி!



ஐம்பது அடி தூரம் நடந்தாலே, இந்த புத்தக மூட்டையை சுமந்து கொண்டு எப்படி நடந்து வருவது என நம்ம வீட்டு குட்டீஸ் தர்ணா செய்கிறார்கள். இவர்கள் வீட்டை விட்டு கீழே இறங்கியதும், பள்ளிக்கு செல்ல பைக், வேன், ஆட்டோ அல்லது பள்ளி பேருந்து காத்து இருக்கிறது.


இது போன்று சொகுசாக பயணம் செய்யும் நம்ம பிள்ளைகளுக்கு மத்தியில் தினமும் 14 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு சென்று வருகிறார் நிகிதா. நிகிதா, மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் அருகேயுள்ள பால்சில் கிராமத்தை சேர்ந்தவர்.


9ம் வகுப்பு படிக்கிறார். இவர் பள்ளிக்கு தினமும் 14 கிலோ மீட்டர் நடந்தே செல்கிறார். அதுவும் பயங்கர மிருகங்கள் நிறைந்த வனப்பகுதியை கடந்து. நிகிதாவின் தந்தை ஒரு ஏழை விவசாயி. அவர் சம்பாதிப்பது குடும்பத்தின் செலவிற்கே சரியாக இருப்பதால், அவரால் நிகிதாவின் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.


 நிகிதா நடந்து செல்லும் சில நேரம் காட்டுப்பன்றிகள் குறுக்கிடும். அதை சமாளித்து பாம்பு மற்றும் பூரான்களை கடந்தே பள்ளியை அடைகிறார். தினமும் இரண்டு மணிநேரம் முன்னதாக நடையை தொடங்கினால்தான் குறிப்பிட்ட நேரத்திற்கு இவரால் பள்ளியை அடைய முடியும். மாலை அவர் வீடு திரும்பும் போது இருட்டிவிடும். டாக்டராக வேண்டும் என்ற தனது ஆசைக்கு மத்தியில் இந்த நடைபயணம் அவருக்கு சுகமான சுமையாக உள்ளது என்கிறார் நிகிதா.


நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து மராட்டிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து புனேயை சேர்ந்த சிட்டி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் அவருக்கு உதவ முன்வந்தது. அந்த நிறுவனம் மாணவி நிகிதாவிற்கு மின்சார சைக்கிள் ஒன்றை கடந்த மாதம் 25ம் தேதி பரிசாக அளித்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுமி நிகிதாவின் கல்வி ஆர்வம் குறித்து அறிந்த எங்கள் நிறுவனம் அவருக்கு எலக்ட்ரிக் சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளது.


இனி அவர் தனது பயணம் குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை. அவரது மருத்துவ கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்’’ என தெரிவித்தார். இது தொடர்பாக நிகிதா கூறுகையில், ‘‘என்னுடைய பள்ளி படிப்பு முடியும் வரை நடந்து தான் செல்லவேண்டுமோ என நினைத்திருந்தேன். பல நேரங்களில் நடந்து வரும் அசதியினால் பள்ளியில் தூங்கிடுவேன். இப்போது சைக்கிளில் பள்ளிக்கு பறந்து செல்கிறேன்’’ என்றார் நிகிதா.


மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த எலக்ட்ரிக் சைக்கிளை 2 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். நிகிதாவின் மருத்துவ கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

Tuesday, March 26, 2019

சாய் பல்லவியை 2வது திருமணம் செய்யவுள்ள விஜய்!



பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய், நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஏ.எல். விஜய். இவர் இயக்கிய முதல் படம் ‘கிரீடம்’. இந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார்.


அதையடுத்து இவர் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரமை வைத்து ‘தாண்டவம்’, ‘தெய்வத்திருமகள்’, நடிகர் ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’, மேலும் சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களை இயக்கிவருகிறார்.


இயக்குநர் விஜய்க்கும் பிரபல நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சுமூகமாக பேசி 2017ல் விவாகரத்து பெற்றனர்.


விவகாரத்துக்குப் பின் நடிகை அமலாபால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போதும் அவர் ஒரு நடிகையையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.


அந்த நடிகைதான் சாய்பல்லவி. ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு தற்போது அது திருமணம் வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

Monday, March 25, 2019

3 நாள் லீவு.... Leave - விவரம் உள்ளே...



இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.


தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது.


அரசியல் தலைவர்களும் தங்கள் தீவிர பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர். அதே சமயம், இந்த தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் மற்றும் காவல் ஆணையம் பல்வேறு துணிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகளையும் ஏப்ரல் 16 முதல் 18 வரை, 3 நாட்களுக்கு முழுவதும் அடைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்த 3 நாட்கள் மட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் மார்ச் 23 ஆம் தேதியும் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளார் காவல் ஆணையர். எனவே அனைத்து குடிமகன்களும் இந்த நாட்களில் குடியை மறந்துவிட்டு நாட்டின் உண்மையான குடிமகன்கள் என்பதனை நிரூபிக்க தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, March 24, 2019

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மிரட்டும் அதிகாரி - வைரல் வீடியோ



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இன்று (24.03.2019) காலை சுமார் 9.30 மணியளவில் கொடூர் செல்வதற்காக சுமார் 30 பயணிகள் காத்திருந்தனர். அந்த நேரத்தில் T10 பேருந்து மதுராந்தகம் முதல் கொடூர்  வரை இயக்கப்படுவது வழக்கம். 

ஆனால் இன்று காலை அந்த பேருந்தினை மாற்று பகுதிக்கு அனுப்ப திட்டமிட்ட அதிகாரி சம்மந்தமில்லா காரணத்தினை கூறியுள்ளார். என்னவெனில், கொடூர் மார்கமாக செல்ல தற்போது பயணிகள் யாரும் இல்லை எனவே அந்த பேருந்தினை மாற்று ஊருக்கு செல்ல நேரம் நிர்ணயித்துள்ளதாக நடத்துனர் மற்றும் பேருந்து நிலைய நேர நிர்ணய அதிகாரி (Time Keeper) அவர்கள் கூறினார். 
ஆனால் அந்த நேரத்தில் சுமார் 30 பயணிகள் கொடூர் மார்கமாக செல்ல காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பயணிகள் சார்பில் ஒருவர் Time Keeper திரு.முத்துலிங்கம் அவரிடம் காரணம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

       "இன்னா இப்படி கேக்கற நீ...? எவ்வளவு பேரு இருக்காங்க..?? ஒரு  ஆளுக்கு ஒரு பஸ் அனுப்ப முடியுமா...? சும்மா போட்டோ எடுக்கற வேல லாம் வெச்சுக்காத.... மதுராந்தகத்துல பஸ் ஏற மாட்ட" இவ்வாறு கூறினார். இதன் வீடியோ பதிவு கீழே.....

இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு அல்லது போக்குவரத்து கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா...? அல்லது அதிக வருவாய் வரும் வழித்தடத்தில் தான் அதிக பேருந்துகளை விடுவார்களா...? தினந்தோறும் செல்லும் பேருந்தினை இப்படி இயக்கினால் அந்த மார்கத்தில் செல்லும் பயணிகளின் நிலை என்ன..? காத்திருந்து பார்ப்போம் அரசின் நடவடிக்கைகளை.....!!!