வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-12-29
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 09, 2020

அச்சச்சோ ரேஷன் கடையில் காய்ந்து கிடக்கும் பொங்கல் கரும்புகள் | Pongal Prices are damaged in Fairprice Shop Goodown

செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்க உள்ள கரும்புகள், பண்டகசாலையில் காய்கின்றன.




தமிழக அரசு, கூட்டுறவு ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. தொகுப்பில், கரும்பு, உலர் திராட்சை உள்ளிட்டவை தரப்படுகின்றன.


செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் கரும்புகள் வழங்க, செங்கல்பட்டு கூட்டுறவு பண்டக சாலை கிடங்கில், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


பல நாட்களுக்கு முன்பே, வெளி மாவட்டங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட கரும்புகள், ஒரே இடத்தில் பல நாட்களாக கிடப்பதால், தற்போது, காய்ந்து கருகுகின்றன.குடும்ப அட்டைதாரர்களுக்கு, காய்ந்த கரும்புகள் வழங்கப்படுமா அல்லது புதிதாக கரும்புகள் வரவழைத்து தரப்படுமா என்பது, கேள்வியாக இருக்கிறது.

Monday, January 06, 2020

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை | Perumbakkam Near Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இதில் 80% மக்களுக்கு விவசாயமே பிரதான வாழ்வாதாரமாக விளங்குகிறது. 
இந்நிலையில் இந்த ஆண்டு பொழிய வேண்டிய பருவ மழையின் அளவு மிகவும் குறைவானதால், ஏரிநீர் பாசனத்தை நம்பி இருந்த சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் வெறும் நிலமாக உள்ளது. மழையை நம்பி ஏர் உழுது காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் நீர் இல்லாததால் ஏரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் நிலைகுலைந்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு பொங்கல் விழாவினை கொண்டாடும் சூழலே எங்களுக்கு இல்லை என மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பெரும்பாக்கம் கிராம விவசாயிகள். 
எனவே, தமிழக அரசின் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தக்க நிவாரணம் வழங்க வேண்டுமென குமுறுகின்றனர் பெரும்பாக்கம் கிராம விவசாயிகள். 

Saturday, January 04, 2020

வந்தவாசியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி திமுக மறியல் | DMK Strike in Road


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், 1வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பச்சையம்மாள், 30 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், தி.மு.க.,வினர் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வந்தவாசியில், காஞ்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் பேசி மறியலை கைவிட செய்தனர்.



* திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை யூனியன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அங்கு ஒரு ஓட்டுப்பெட்டி காலியாக திறந்து கிடந்தது. இதனால், தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம், அந்த ஓட்டுப்பெட்டி மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த பயன்படுத்தப்பட்டவை என கூறியதையடுத்து, வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


* செய்யாறில் தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி, திடீரென காணாமல் போனதால், பெட்டியின் ஸ்குருவை கழற்றி பெட்டியை திறந்தனர். வந்தவாசி ஓட்டு எண்ணும் மையத்தில், கண்டவரப்பட்டி பகுதிக்கான ஓட்டுப்பெட்டி பூட்டை சாவி மூலம் திறக்க முடியாததால், கல்லால் பூட்டை உடைத்து திறந்தனர். இந்நிலையில், செங்கத்தில் நடந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

[காட்டாங்கொளத்தூர்] பொங்கல் பரிசில் அ.தி.மு.க., விளம்பரம்? | ADMK Ads in Pongal Price in Kattankolathur

அரசின் பொங்கல் பரிசு பையில், அ.தி.மு.க., விளம்பரம் இடம் பெறுவதாக, காட்டாங்கொளத்துார் ஒன்றிய தி.மு.க.,வினர், மாவட்ட கலெக்டரிடம், நேற்று புகார் மனு அளித்தனர்.




மனு விபரம்:தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாயுடன், பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில், பொங்கல் பரிசு பைகளில், அரசு முத்திரைக்கு பதிலாக, அ.தி.மு.க.,வினர் படங்கள் அச்சிட்டு, வினியோகம் செய்வதற்கு, அக்கட்சியினர் தயார் நிலையில், பைகளை வைத்துள்ளனர்.


இது போன்ற பைகள், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அதிகம் உள்ளன.இதை தடுத்து, பொங்கல் பரிசுகளை, அரசு முத்திரையிட்ட பைகளில் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, January 03, 2020

நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை...? Unfortunate News

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என்ற வாசகத்துடன் முருகேசன் என்பவர் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கேதுவார்பட்டியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்ட முருகேசன் டெபாசிட்டை இழந்தார். 

இந்நிலையில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி வித்தியாசமான முறையில் அவர் போஸ்டர் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



வித்தியாச போஸ்டர் 
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார். ஆனால் நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.




விரக்தி 
இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு, கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி போஸ்டர் ரெடி செய்துள்ளார். இந்த போஸ்டரை டிஜிட்டல் வடிவிலும் சமூக வலைதளங்களில் அவர் உலவ விட்டுள்ளார்.



லந்து 
மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும். அந்தளவுக்கு அதில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.



உலக அளவில் 
உலகிலேயே தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இது தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

[மகிழ்ச்சி தகவல்] | பள்ளி திறக்கும் நாட்கள் ஒத்திவைப்பு | School Leave Extension News Tamilnadu

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேல் அரையாண்டுத் தேர்வையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுப்ட்டிருந்த காரணங்களினால் பள்ளி திறக்கும் தேதி ஜனவரி,4 2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.




ஆனால், நாளை சனிக்கிழமை முடிந்து மறுநாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் தொடர் விடுமுறை அளித்துவிடலாம் என்ற நோக்கம் மட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வரை தொடர்ந்து இழுபறியில் உள்ளதால் ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில் காலதாமதமாகும் என்ற நோக்கத்திற்காகவும் பள்ளி மறுதிறப்பு தேதியானது ஜனவரி,6 - 2020 திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.