Run World Media: 05/15/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 15, 2020

மாமல்லபுரத்தில் அதிமுக மத்திய மாவட்ட வர்த்தக பரிவு சார்பாக ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு | ADMK Giving Corona Relief at Mahabalipuram Circle

செங்கல்பட்டு மாவட்டம்,  மாமல்லபுரத்தில் அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி. ராகவன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு  இலவச உணவு (பார்சல் முறையில்) வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கொரோனா நோய் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் இருந்து மாமல்லபுரம் பேரூராட்சி பகுதி முழுவதும் துவங்கி அருகிலுள்ள வடகடம்பாடி, மணமை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வந்த நிலையில், இலவச உணவு திட்டத்தினை (பார்சல் மட்டும்காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் துவக்கி வைத்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளீரணி செயலாளருமான மரகதம் குமரவேல் வழங்கியதை தொடர்ந்து இதுநாள் வரை சமூக இடைவெளியுடன் பொது மக்கள் உணவை வாங்கி சென்றனர்

இந்த நிகழ்வில் நகர செயலாளர் மாமல்லபுரம் கணேசன், நிர்வாகி உமாபதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அச்சிறுபாக்கம் பேரூர் 13-வது வார்டில் 150 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் | Corona Relief given by DMK at Acharapakkam 13th Ward


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.13, பஜனை கோயில் தெரு பகுதியில் வசிக்கும் 150 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி தி.மு.க செயலாளர் எஸ்.உசேன் தலைமையில், கழக முன்னோடி ஆசிரியர்.தருமன் முன்னிலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் கடும் பாதிப்பில் உள்ள இப்பகுதி மக்களுக்கு தி.மு.க. சார்பாக அச்சிறுபாக்கம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பார் டி.மோகனகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை வார்டின் முக்கிய பகுதியில் துவங்கி பின்னர் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி ஏ.ஆர்.ஏழுமலை, அவைத்தலைவர் சையத் முகமது, பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.பட்டாபி, பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய துணைச் செயலாளர் கோகுலம் இரமேஷ், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் முகமது கனி உள்ளிட்ட சில தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குழந்தைகளுக்கு பால் வழங்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு | CM Pettition


செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கத்தில் தலைமை அலுவலகம் கொண்டு செயல்பட்டு வரும் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பினர், கொரோனா பாதுகாப்பு பணிகளில் விரைவாகவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாகவும் செயல்பட்டுவரும் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவு தேவைகளின் அடிப்படையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது குழந்தைகள்தான் எனவும், குழந்தைகளின் முக்கிய உணவு தேவையான பால்கூட வாங்க இயலாத நிலையில் மக்கள் உள்ளதால், ஆவின் பால் நிறுவனம் மூலம் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமாகவோ அல்லது ரேஷன் கடைகள் மூலமாகவோ பால் வழங்க ஆணையினை பிறப்பிக்குமாறு கடந்த 04.05.2020 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் தலைவர் டி.தேவன்பு, அச்சிறுபாக்கம் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் அ.டோமினிக் ஆகியோர் இந்த மனுவினை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்