வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 13 வயது சிறுமியைக் கொன்ற கணவர்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து சரணடைய வைத்த மனைவி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

13 வயது சிறுமியைக் கொன்ற கணவர்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து சரணடைய வைத்த மனைவி!மதுவால் 13 வயது பெண்ணுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்

ஆத்தூர்: மது!! இன்னும் உயிரை காவு வாங்க போகுதோ? போதை தலைக்கேறிய இளைஞரால் 13 வயது பெண் குழந்தைக்கு நடந்த உச்சக்கட்ட பயங்கரம் இது! ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் தம்பதி சாமிவேல்-சின்னபொண்ணு. சாமிவேல் வேன் டிரைவராக இருக்கிறார். திருமணமாகி 13 வயதில் ராஜலட்சுமி என்கிற ஒரு பெண் இருக்கிறாள். 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். ரொம்ப துறுதுறுவென இருப்பாள் இந்த சிறுமி. அக்கம் பக்கம் வீட்டினருக்கு ராஜலட்சுமியை மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி கிண்டல், கேலி என்று அவளை சீண்டி விளையாடி கொண்டே இருப்பார்கள்.

அடிக்கடி கிண்டல், கேலி 
 இப்படித்தான் கார்த்தி என்ற 27 வயது இளைஞரும் கிண்டல் செய்தார். இவர், சாமிவேல் வீட்டு தெருவில்தான் வசித்து வருகிறார். இவரும் டிரைவர். ஆனால் எப்பவுமே தண்ணிதான். முழுநேர போதை ஆசாமி. ராஜலட்சுமியை அடிக்கடி கார்த்தி கிண்டல் செய்திருக்கிறார். மற்றவர்களை போல கார்த்தி கிண்டல் செய்வதையும் சாமிவேல் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதுதான் பிரச்சனையே!! (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

மதுபோதை
 2 நாளைக்கு முன்னாடிகூட ராஜலட்சுமியை கார்த்தி கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் இந்த முறை சில்மிஷம் கூடிய கிண்டலாக அது இருந்திருக்கிறது. அதனால் ராஜலட்சுமி பயந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டார். ஆனால் நேற்றிரவு 8 மணி இருக்கும். சாமுவேல் வீட்டுக்குள் கார்த்தி நுழைந்தார். ஃபுல் போதை வேறு. அங்கு யாரும் இல்லாததை அறிந்துகொண்ட கார்த்தி, இந்த கிண்டல், சில்மிஷத்தையும் தாண்டி, ராஜலட்சுமியை பலாத்காரமே செய்ய துணிந்துவிட்டார்.


சின்னபொண்ணு
கார்த்தியை தடுக்கும் வலிமை சிறுமிக்கு இல்லை... எனவே கதறினாள்... அலறினாள்.. இந்த சத்தத்தை கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியின் தாய் சின்னபொண்ணு ஓடி வந்தார். கத்தி, தன் அம்மாவை சிறுமி கூப்பிட்டு விட்டதால், கார்த்திக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஓடிவந்த சின்னபொண்ணுவை பலமாக கீழே தள்ளிவிட்டார்.

தலையை துண்டித்தார் 
தன் பாக்கெட்டில் வைத்திருந்த பயங்கரமான ஒரு கத்தியை எடுத்து, சிறுமியின் கழுத்தை அறுத்தார். சிறுமியின் தலையை தனியாக துண்டித்தே எடுத்து விட்டார். ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியின் தலையை கையில் எடுத்துக் கொண்டு தெருவில் நடந்து வந்த கார்த்தி. தெருவில் இருந்தவர்கள் இதைகண்டதும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

நடுரோட்டில் தலை
 பின்பு தளவாய்பட்டி - சுந்தராபுரம் நடுரோட்டில் அந்த தலையை வைத்துவிட்டு, தன் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றார். விபரீதத்தை அறிந்த கார்த்தியின் மனைவி சாரதா அதிர்ச்சியடைந்தார். உடனே கார்த்தியை தனது பைக்கில் உட்கார வைத்து கொண்டு நேராக ஆத்தூர் டவுன் போலீசில் கணவனை பிடித்து ஒப்படைத்தார். இதனையடுத்து கார்த்திமீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாலை நடுவே இருந்த சிறுமியின் தலை, மற்றும் வீட்டில் கிடந்த உடல் இரண்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சொத்து பிரச்சனை இருப்பதாகவும் கூறப்படுகிறது.


நமக்குத்தான் குழந்தைகள் 
எவ்வளவு வயதானாலும் பெண் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு குழந்தைதான். ஆனால் காம வெறியர்கள் பார்வையில் இந்த பெண் பிள்ளைகள் குழந்தைகளாக தெரியப்படுவதில்லை. கூடவே நாசமாய் போன மதுபோதையும் சேர்ந்து கொண்டால், பெண் குழந்தைகளின் நிலை கேட்கவே வேண்டாம்.

பாதுகாப்பு தேவை 
எந்தநேரமும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நடமாடும் பதட்ட நிலைமையை இந்த நாடு உருவாக்கி விட்டது. இதற்கு நிறைய உதாரணங்களை மக்கள் கண்ணெதிரே பார்த்தாலும், தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை இன்னும் அதிகரிக்க வேண்டிய நிலைதான் பெற்றோர்களுக்கு நிறையவே இருக்கு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment