வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label District News. Show all posts
Showing posts with label District News. Show all posts

Sunday, November 28, 2021

லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் பலி | Kancheepuram Accident in Bangalore Highway | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை அருகே உள்ள கேஎப்சி சிக்கன் கடை எதிரே இரவு 8 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் , நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்த சங்கீதா மற்றும் நீலவேணி ஆகியோர் சென்னை மார்க்கமாக நடந்து சென்ற போது, வேலூரில் இருந்து வந்த லாரி இருவர் மீது மோதியது. 

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி சென்று விட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கிளி ஆற்று வெள்ளத்தில் நேற்று செல்பி எடுக்கும் பொழுது தவறி விழுந்து மனைவி கண்ணெதிரே கணவன் தண்ணிரில் மூழ்கி  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் ஜெயசக்தி நகரை சேர்ந்த தீனதயாளன் (37) இவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் மதுராந்தகம் வட்டம், கீழாமூர் பகுதியில் செல்லும் கிளி ஆற்றின் பாலத்தில் மழை வெள்ளத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.


அப்போது கணவன் தீதையாளனை மனைவி சந்தியா தன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மனைவி கண்ணெதிரே தண்ணீரில் தவறி விழுந்து ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், கிராம மக்கள் அவரை சடலமாக மீட்டனர்.  இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

எச்சரிக்கை: மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு ஷட்டர் திறப்பு | Emergency Shutter Opened in Madurantakam Lake | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

சுமார் இருபத்தி ஒன்பது புள்ளி தண்ணீர் அதாவது 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது.  

தற்போது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக் 27200 கன அடி வந்து கொண்டிருப்பதால் அவசரகால ஷட்டர் மூலம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக 27200 கனஅடியும் அவசரகால ஷட்டர் மூலம் 2300 கனஅடி தண்ணீரும் ஆக மொத்தம் வினாடிக்கு 29500 கன அடி தண்ணீர் உபரிநீராக கிளி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக ஆற்று கரையோரம் உள்ள கத்திரி சேரி, தோட்டநாவல், இருசமாநல்லூர், சகாய நகர் உள்பட 21 கிராமப்புறங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

மேலும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் துரித நிலையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Monday, November 05, 2018

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு



மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வை 1½ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 

எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி திறன் அடிப்படையில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. 2 நிலைகளாக இத்தேர்வு நடைபெறும். அதன் முதல்நிலை தேர்வு நேற்று தமிழகத்தில் நடைபெற்றது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


தமிழகத்தில் 505 தேர்வு மையங்களில் இந்த திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 30 மாணவர்கள் பங்கு பெற்று தேர்வு எழுதினார்கள். முதல்நிலை தேர்வு 2 கட்டங்களாக நடைபெற்றது. நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன்பிறகு காலை 11 மணி முதல் காலை 11.30 மணிவரை இடைவேளையும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது. இந்த தேர்வின் தொடர்ச்சியாக அடுத்த நிலை தேர்வு மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2 தேர்வுகளில் தேர்வு பெற்று தகுதி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை கிடைக்கும்.



தகுதி பெறுபவர்களுக்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் வரை மாதம் ரூ.1,000 வீதமும், அதன் பிறகு பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரை மாதந்தோறும் கல்வி உதவி தொகையை மத்திய அரசு வழங்கும்.  இதில் தமிழகத்தில் இருந்து குறைவான மாணவர்களே தகுதி பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 மாணவர்கள் தகுதி பெறுவதாகவும், கடந்த ஆண்டில் தான் அதிகபட்சமாக 80 மாணவர்கள் தகுதி பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலும் இந்த எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவு தான்.



எனவே தமிழகத்தில் இருந்து அதிகளவில் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவி தொகையை பெறுவதற்கு ஏதுவாக பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடத்தில் உரிய பயிற்சி கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Friday, November 02, 2018

ஆபத்தில் உதவி செய்யும் அற்புதமான திமிங்கலங்கள்!



ஆபத்தான நேரத்தில் திமிங்கலங்கள் உதவி செய்தன. 

 
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் திமிங்கல ஆராய்ச்சியாளர் நன் ஹாசர், தன் குழுவினருடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அப்போது மிக மிகப் பிரம்மாண்டமான, சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுடைய ஹம்பேக் திமிங்கலம் ஒன்று வந்தது. அதன் அருகே சென்று, திமிங்கலத்தைத் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரும் அவருடைய குழுவினரும் திமிங்கலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து படம் பிடித்தார்கள். ‘‘நாங்கள் அனைவரும் திமிங்கலம் மீதே கவனம்  செலுத்திக்கொண்டிருந்தோம். 
 
அப்போது மிகப் பெரிய புலிச்சுறா ஒன்று எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த திமிங்கலம், சுறாவைத் தன் தலையாலும் துடுப்பாலும் வாலாலும் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. டால்பின்களை போன்றே திமிங்கலமும், மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களைப் பாதுகாக்கிறது என்ற உண்மையை இப்போது படம் பிடித்து, நிரூபித்துவிட்டோம். 
 
கடந்த 28 ஆண்டுகளாகத் திமிங்கலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு திமிங்கலத்தால் நான் காப்பாற்றப்பட்ட இந்தத் தருணம் என் வாழ்க்கையில் மிகவும் அற்புதமானது!’’ என்கிறார் 68 வயது நன் ஹாசர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Wednesday, October 24, 2018

உனக்காக சென்னைக்கு வர்றேன்.. வானம் இடியும் அளவு சிரித்த கயல்விழி.. வைரலாகும் வாட்ஸ் ஆப் ஆடியோ



மது விலக்குப் பிரிவு கூடுதல் எஸ்பி ஒருவர், பெண்ணிடம் பேசும் பேச்சு வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்ட மது விலக்கு கூடுதல் எஸ்பி குணசேகரனும், ஒரு பெண்ணும் பேசும் பேச்சுதான் வைரலாகியுள்ளது. எஸ்.பி. பேச பேச அந்தப் பெண் ரொம்ப கூடுதல் உரிமை எடுத்து கொஞ்சுவது போல பேசுகிறார். ஹாஹாஹாஹவென வானம் இடியும் அளவுக்கும் சிரிக்கிறார் பேச்சின் இடையே. படு செயற்கையாக இருக்கிறது அப்பெண்ணின் பேச்சு. ஆனால் ஏஎஸ்பிதான் ஏமாந்து விட்டார் என்று தெரிகிறது.

ஆடியோ பேச்சு
 திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் எஸ்.பி., குணசேகரன். இவர்தான் 'அவர்'. சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசிய ஆடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.   (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

கொஞ்சல்... குலாவல் 
 அதில் எஸ்.பி. சாரின் கொஞ்சல், குலாவல், கெஞ்சல், வர்ணனை என பல வகைககளில் பேச்சிலேயே பின்னி எடுக்கிறார். அந்த பெண்ணும் சும்மா இல்லை.. கொஞ்சும்போதெல்லாம் சிரிக்கிறார்.. வர்ணிக்கும்போதெல்லாம் வெட்கப்படுகிறார்.


ஒரு சின்ன சாம்பிள்
 "'வாட்ஸ் ஆப் குரூப்பை விட்டு ஏன் வெளியே போயிட்டீங்க?" இப்படித்தான் அந்த ஆடியோ ஆரம்பிக்குது. பிறகு மெல்ல மெல்ல காதல் ரசம் சொட்ட தொடங்கிறது. அதிலிருந்து ஒரு குட்டி சாம்ப்பிள்:
 கூடுதல் எஸ்பி:
 என்னடா... கண்டுக்கவே மாட்டேங்கற...அழகா இருக்கிற பொண்ணு நீ... உனக்கு என்ன குறை...?
 
 பெண்:
 வெளியே சொல்லிடாதீங்க. சிரிப்பாங்க. அப்ப நீங்க என்னை இன்னும் பாக்கலைன்னு... அர்த்தம்"
 கூடுதல் எஸ்பி: 
"கருப்பா, குண்டா இருந்தாலும், முகம் லட்சணமா இருக்கா... இல்லையா? நீங்க என்ன பன்றீங்க? உங்கள பார்க்க நான் சென்னைக்கு வரட்டுமா?
 
 பெண்: 
"திருப்பூர்ல இருந்து சென்னைக்கு வர்றீங்களா, அதுவும் என்னைய பார்க்கவா?"
 கூடுதல் எஸ்.பி:
 "ஏன், வரமாட்டோமா? நான், உங்கள வந்து பார்த்தா சந்தோஷப்படுவீங்களா, இல்லையா? 
 
 பெண்:
 சந்தோஷப்படுவேன். நமக்கும் காவல்துறை சப்போர்ட் பண்ணுதுன்னு நினச்சு சந்தோஷப்படுவேன். 
கூடுதல் எஸ்.பி:
 அப்படி வந்தா காவல்துறை அதிகாரியா வரமாட்டேன். தனி நபராதான் வருவேன், வரட்டுமா?
 
 பெண்:
 தாராளமா வாங்க சார்... என்னைக்கும் உங்களை சென்னை வெல்கம் பண்ணும்...
 கூடுதல் எஸ்.பி:
 சென்னை வெல்கம் பண்ணுதோ, இல்லையோ... நீ வெல்கம் பண்ணுவியா...? கயல்விழியை பார்க்க வரனுமா, வேண்டாமா? 
 
பெண்:
 கயல்விழி சென்னையிலதான் இருக்கா, அதான் சென்னை வெல்கம் பண்ணும்னு சொன்னேன்.

இது ஒரு சதி
 இப்படியே இந்த ஆடியோ 4 நிமிடத்துக்கு நீள்கிறது. இது குறித்து, கூடுதல், எஸ்.பி.யிடம் கேட்டால், ஒரு பிரச்சனை சம்பந்தமா 8 மாசத்துக்கு முன்னாடி ஒரு பெண், என்னை கூப்பிட்டு பேசினார். ஆனா எந்த தவறான நோக்கத்திலும் நான் பேசவில்லை,. என் பெயரை கெடுக்கவே இப்படி சிலர் செய்துள்ளார்கள் என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



பட்டாபிராமில் அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி



அரைகுறையாக எரிந்த குப்பையில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

 
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பேக்கரி கடை ஊழியர். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் பிரதிக்ஷையா (வயது 4). இவர்களுக்கு பிரதீப் (2) என்ற மகனும் இருந்தான். கடந்த 20-ந் தேதி சக்திவேல் வீட்டின் அருகே குவிந்து இருந்த குப்பைகளை மொத்தமாக கூட்டி தீ வைத்தார். (தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!

சிறிது நேரம் கழித்து குப்பைகள் அரைகுறையாக எரிந்த நிலையில் அதன் மீது தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார். அந்த குப்பையில் இருந்த சில பிளாஸ்டிக் பொருட்கள் உருகிய நிலையில் புகைந்தபடி இருந்தது. குழந்தை பிரதீப் அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.


அப்போது அவனது காலில், எரிந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒட்டியது. இதில் வலி தாங்க முடியாத அவன் புகைந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தான். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு கதறி அழுதான். இதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தை பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மாணவி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் மறியல்



செங்கம் அருகே மாணவி பாலியல் புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். 

 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கண்ணக்குருக்கையை அடுத்த மேல்நாச்சிப்பட்டு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியின் கணித ஆசிரியர் கண்ணன் (வயது 46) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் பெற்றோர் புகார் செய்தனர்.



அதைத்தொடர்ந்து அந்த புகார் மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று விசாரிக்க நேற்று முன்தினம் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்களுடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியருக்கும், அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் பள்ளிக்குள் புகுந்தனர்.  வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த கண்ணனை அவர்கள் அனைவரும் சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் அவரை அங்கிருந்து மீட்டுச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கண்ணன் மீது செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர் மீது போக்சோ, பாலியல் தொல்லை, தீண்டாமை உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த சந்தோஷ் (வயது 19) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே ஆசிரியர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.



இந்த நிலையில் ஆசிரியர் கண்ணனுக்கு ஆதரவாக அவரை விடுதலை செய்யக்கோரி பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து கண்ணக்குருக்கை - மேல்நாச்சிப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து வகுப்புக்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இந்த நிலையில் திருவண்ணாமலை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கண்ணனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், தாக்கியதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.  இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறுகையில், ‘பணியில் இருந்த ஆசிரியரை சமூக விரோதிகள் தாக்கி உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும். ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடில் பள்ளிகளை பூட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts