வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 21, 2018

கோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா..



ஓசூரில் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதி ஆணவக்கொலை

சுவாதியை சரமாரியாக அடித்து உதைத்தது மட்டுமின்றி, அவரது கை, கால்களையும் கட்டி ஆற்றில் உயிரோடு தூக்கி போட்டதும் பெற்ற தகப்பனேதானாம்! ஓசூர் அருகே ஒரு கிராமத்தில் சுவாதி, நந்தீஷ் என்பரை காதலிக்க, இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தது. 
வேறு வேறு சாதி என்பதால் வழக்கம்போல் எதிர்ப்பு வந்ததால், இருவரும் வீட்டை விட்டுஓடிப்போய் ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டார்கள். பிறகு அந்த திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
எங்கேயே நிம்மதியாக விறகு கடை ஒன்றை வைத்து பிழைத்துகொண்டிருந்தவர்களை, சுவாதியின் பெற்றோர் கண்டு பிடித்து விட்டார்கள். சுவாதியின் அப்பா சீனிவாசன், தனது சொந்தக்காரர்கள் கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோரை கூட்டிக் கொண்டு, வாடகைக்கு ஒரு காரையும் எடுத்துக் கொண்டு சுவாதியை விரட்டி பிடித்து விட்டார்கள்.

காரில் ஏற சொன்னார் 
நேரில் பார்த்ததும், சுவாதி-நந்தீஷிடம் நல்ல மாதிரியாக பேசி, நடித்து காரில் ஏற்றிக் கொண்டு மாண்டியா பக்கம் சென்று விட்டார்கள். அங்கு வைத்து அவர்களிடம், பிரிந்து போய்விடுமாறு சொல்ல, இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத காதல் ஜோடி மறுப்பு சொன்னார்கள். அதன்பிறகுதான் 3 பேரும் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடிவயிறு நாசம் 
 இருவரையும் தாக்கி கொன்றதுடன், சுவாதியின் முகத்தை சிதைத்து, அடிவயிற்றை நாசமாக்கி, பிறகு ஒரு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசி விட்டுபோனார்கள். இதையடுத்துதான் அழுகிய நிலையில் பிண மூட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட 3பேரையும் கைது செய்துவிட்டார்கள்.

கிராமத்தினர் தலைமறைவு? 
ஆனால் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களும் இன்னும் இருக்கிறார்கள். அதனால் விசாரிப்பதற்காக சுவாதி கிராமத்துக்கு போலீசார் சென்றால், ஊரே காலியாக கிடக்கிறதாம். ஊருக்குள் ஒருவரையும் காணோம். போலீசுக்கு பயந்து கொண்டு எங்கே போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சுவாதி தயக்கம் 
அதனால் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கிராம நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை மிக தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்போது வெளிவந்த கூடுதல் தகவல் என்னவென்றால், சுவாதியை கண்டுபிடித்தவுடன் அப்பாவை கண்டு அவர் பேச தயங்கி இருக்கிறார்.

கோயிலுக்கு போகலாம் 
ஆனால் அப்பா சீனிவாசன்தான், "கோயிலுக்கு போகலாம்.. வாம்மா" என்று கூப்பிட்டிருக்கிறார். காரில் ஏறியவுடனேயே 2 பேரும் பிரிந்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மாட்டேன் என்று சுவாதி சொல்லவும் ஓடும் காரிலேயே சுவாதியை அடித்து உதைத்திருக்கிறார்.

உயிரோடு வீசினார்
இப்படி இருவரையும் கூப்பிட்டு கொலை செய்வது என்பது ஏற்கனவே 3 பேரும் பிளான் பண்ணியிருக்கிறார்கள். அதற்காக பெலக்வாடி என்ற பகுதியையும் முன்கூட்டியே தேர்வு செய்தும் இருக்கிறார்கள். அந்த இடம் வந்ததும், நந்தீஷையும், சுவாதியையும் காரில் இருந்து இறக்கி, அவர்களது கை, கால்களை கட்டி காவிரி ஆற்றில் தூக்கி உயிரோடு தூக்கி போட்டது சீனிவாசன்தானாம்!

மேலும் 3 பேர் கைது  
இந்த கொலை தொடர்பாக அஸ்வதப்பா, வெங்கட்ராஜ் மற்றும் லட்சுமணன் என்னும் மேலும் 3 பேர் கைது ஆகியிருக்கிறார்கள். இதுவரை இந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்கேப் ஆன கார் டிரைவர் இன்னும் பிடிபடவே இல்லை. அவர் பெயர் சுவாமிநாதன். அவருக்கு போலீஸ் வலை விரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


50 வயசாச்சு.. காட்டுமணி செய்த வேலை இருக்கே.. கொடைக்கானல் அருகே ஒரு அக்கிரமம்



பெயர் காட்டு மணி... வயசு 50.. ஆனா பண்ணியிருக்கிற வேலையோ ரொம்ப ரொம்ப கேவலம்! கொடைக்கானல் அருகே உள்ள பகுதி செண்பகனூர். இங்கு வசித்து வருபவர்தான் காட்டுமணி. கல்யாணம் ஆகிவிட்டது. கட்டின மனைவியை படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார் காட்டு மணி. பல கொடுமைகளை வாழும் நாளெல்லாம் அந்த பெண்ணுக்கு தந்தார். இதனாலேயே மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்தும் விட்டார்.


பன்றிகள் வேட்டை 
காட்டு மணி வேலை என்ன தெரியுமா? பன்றிகளை வேட்டையாடுவதுதான். விவசாய நிலங்களில் பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்துவிட்டால், காட்டுமணியை தான் கூப்பிடுவார்கள். இவர்கள் பன்றிகளை விரட்டுவதில் கில்லாடி!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கதவை சாத்தினார் 
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காட்டுமணியின் வீட்டு முன்பு 14 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அவன் பெயர் நாகராஜ். விளையாடி கொண்டிருந்தவனை திடீரென தனது வீட்டுக்குள் கூப்பிட்டு கதவை சாத்தி கொண்டார் காட்டு மணி.

மகனை காணவில்லை  
பிறகு சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட ஆரம்பித்தார். இதனால் பையனுக்கோ உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டுவிட்டது. காட்டு மணி வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த மகனை காணவில்லை என்று அவரது தாயார் தேடி வந்துவிட்டார். காட்டு மணியின் வீட்டை தட்டினால் அவர் திறக்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தில் போய் சொன்னதும், எல்லோரும் வந்தார்கள்.

கும்மியெடுத்தார்கள் 
கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். அங்கே காட்டுமணி சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் துன்புறுத்தப்பட்டதை ஆத்திரமடைந்தார்கள். அடுத்த செகண்டே காட்டு மணிக்கு தர்மஅடிதான். தெருவே சேர்ந்து காட்டு மணியை கும்கும்மென்று கும்மியெடுத்தார்கள். பிறகு போலீசில் புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காட்டு மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனுக்கு சிகிச்சை 
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காட்டு மணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், போராட்டமே செய்வோம் என்று அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பெண்குழந்தை பெற்றதால் ஆத்திரம்.. சிலிண்டரைத் தூக்கி மனைவியை அடித்த கணவர் கைது!



பெண் குழந்தை பிறந்தது தொடர்பான வாக்குவாதத்தில் சிலிண்டரால் தாக்கி மனைவியை சிலிண்டரைக் கொண்டு கடுமையாகத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் அல்பேஷ் (30). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அவ்னி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அல்பேஷ் ஆண் குழந்தையை பெரிதும் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் அவ்னியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி கடந்த 5ம் தேதி அல்பேஷ், அவ்னி மற்றும் அவர்களது ஒரு வயது குழந்தை துணி வாங்க கடை வீதிக்குச் சென்றுள்ளனர். 
 
அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் இருந்த அல்பேஷ், வீட்டிற்கு வந்ததும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். பின்னர் கிரிக்கெட் பேட்டால் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவ்னி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், எட்டு நாள் சிகிச்சை அளித்தும் தொடர்ந்து அவ்னியின் நிலை மோசமாகவே இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்பேஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை.. பதறிய பெற்றோர்..



உத்தர பிரதேசத்தில் ரயில் செல்லும் நேரத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயதுதான் ஆகிறது. இந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும், ரயில் அவளுக்கு மேலாக சென்றதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

மண்டியிட்டு விழுந்தது 
அந்த குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. 
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த குழந்தை சிக்கியது.

சரியாக ரயில் வந்தது 
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அங்கு ரயில் வந்துவிட்டது. அந்த குழந்தைக்கு மேலாக அந்த ரயில் வேகமாக சென்றுள்ளது.

ஒன்றும் ஆகவில்லை
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து, நடுங்கி ''ஓ'' என்று கத்தினார்கள். ஆனால் ரயில் சென்று முடிக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்பதால், ரயில் செல்லும் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ரயில் சென்ற பின் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

ஆச்சர்யம்
இந்த விபத்தில் அந்த குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. அந்த குழந்தைக்கு இந்த விபத்தில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடுத்து அந்த குழந்தையை அங்கிருந்த எல்லோரும் தூக்கி வைத்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை: புதுச்சேரியிலும் வாய்ப்பு



வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.



இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘’கஜா’’ புயல் கடந்த 15ம் தேதி இரவு நாகையில் கரையை கடந்தது. அப்போது உருவான சூறாவளி காற்று, கனமழையால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்ைட, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சின்னா பின்னமானது. இந்த கோரத்தாண்டவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
பல்லாயிரக்கணக்கான மின் கம்பம், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான கால் நடைகளும் பலியாகின. இந்த பாதிப்பு அடங்குவதற்குள் அடுத்த அடியாக டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு மேல் சென்னை முழுவதும் கடும் இருள் சூழ்ந்தது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அதன் பிறகு எழும்பூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், தாம்பரம், சோழிங்கநல்லூர், தரமணி, பெருங்குடி, கொளத்தூர், வில்லிவாக்கம், மடிப்பாக்கம், ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று(நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது.


இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருக்கும். அதைத்தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். புயலாக மாற வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலமாகவே தமிழக பகுதிகளை கடந்து செல்லும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். குறிப்பாக தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மொத்தத்தில் இரண்டு மாநிலத்திலும் 19 மாவட்டங்களில் இடைவெளி விட்டு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்கள் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் 21ம் தேதி (இன்று) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்தப்படியாக மணிமுத்தாறு 6 செ.மீ., பாம்பன், பாபநாசம், திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts