Run World Media: 11/15/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 15, 2018

மேல்மருவத்தூர் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம்காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமாக  குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்தப் பிரச்சாரத்தில் கிராம பொதுமக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரமானது Rural Star Trust  மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு உதவிக்கு அழையுங்கள் 1098.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


அஜித்துடன் அடுத்த படமா? அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவிருப்பதாக முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை படங்களை இயக்கியவர்
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
எச்.வினோத். இவர் அடுத்ததாக அஜித்தின் தல 59 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வினோத் இயக்கும் படம் இந்திப் படத்தின் ரீமேக் என்றும், புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்னமும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

இந்த நிலையில், எச்.வினோத் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து தல 59 படம் ரீமேக் இல்லை என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பழங்குடியின பெண்ணாக மாறும் நிக்கி கல்ராணிகவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண்ணாக நடிக்க இருக்கிறார்.


‘1983’ எனும் மலையாள படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த நிக்கி கல்ராணிக்கு அந்தப் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அந்தப் படத்திற்காக பல விருதுகளையும் அவர் பெற்றார். பின்னர் கன்னடம், மலையாளம் என வலம்வந்த அவர், டார்லிங் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அவருக்கு தற்போது சார்லி சாப்ளின் 2, கீ என சில படங்கள் கைவசம் உள்ளன. 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் மீண்டும் மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளார் நிக்கி. இதிகாஷா 2 என்னும் படத்தில் அவர் தற்போது நடிக்கஉள்ளார். பினு எஸ் இதை இயக்க உள்ளார். கவர்ச்சி கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் நடித்துவந்த நிக்கி கல்ராணி, இதில் பழங்குடியின பெண்ணாக நடிக்க இருப்பதால் நடிப்பு ரீதியாக அவருக்கு இது ஒரு சவால் மிக்க படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திரஜித்தின் மனைவிக்கும் நிக்கிக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்தாலும், இந்திரஜித்தும் நிக்கியும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 25-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மாதவிடாயின் போது அதீத வலி ஏற்பட காரணங்கள்மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.

இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. மாதவிடாய் வலி என்பது இயல்பானது.அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான். இந்தக் காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்களால் உடலில் மேற்சொன்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன.


 மனதளவிலும் உணர்வுகளும் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இந்த வலி அதிகமாகும்போது சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குக்கூட ஏற்படும் வாய்ப்புண்டு. மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும்தான். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கருப்பையில் பைப்ராய்டு கட்டிகள் (சாதாரண கட்டி) இருப்பவர்களுக்கு வலி வரலாம். Entometeriosis எனப்படும் பிரச்சனையாலும் வலி வரலாம். அதாவது கருப்பைக்குள் வளர வேண்டிய அந்த சதைப்பகுதி (உள் மென் சீத சவ்வு) கர்ப்பப்பைக்கு வெளிப்புறம், சிறுநீர்ப் பாதை அல்லது மலக்குடலின் வெளிப்புறமும் சிலருக்கு உண்டாகி இருக்கும். மாதவிடாய் சமயங்களில் அங்கும் குருதி மடிப்புகள் உருவாகும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அவர்களுக்கு வெளிப்புறம் எங்கெல்லாம் அந்த சவ்வு இருக்கிறதோ அங்கெல்லாம் ஏற்படும்.


அதனால் மாதவிடாயின் போது ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு பெண்களின் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் கருப்பைக்கு வெளிப்புறமும் குருதி மடிப்புகள் உள்ளவர்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழியில்லாமல் உடலின் உள்ளேயே தங்கும்போது அது பிரச்னைகளை உண்டாக்கி அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். இந்தப் பிரச்னை சிலருக்கு மரபுரீதியாக ஏற்படலாம்.

சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினாலும் ஏற்படலாம். சாதாரணமான மாதவிடாய் வலியைப் பொறுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் அதிகமான அளவில் வலி இருக்கும் போது வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஹெவி டோஸ் எடுக்கக்கூடாது. தாங்க முடியாத அளவு வலி வரும் போது மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து தீர்வு காண்பது அவசியம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப் போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.


மாதவிடாய் வலியைக் குறைக்க வைட்டமின் பி1, தையமின், வைட்டமின்பி6, பைரடாக்சின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உணவில் சரியான அளவில் இடம்பெற வேண்டும். பயறு வகைகள், தானிய வகைகள், நட்ஸ், அசைவ உணவுகள் (மீட்) போன்றவற்றை தேவையான அளவு சாப்பிட வேண்டும். கால்சியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நிறுத்தம் என்பது 45லிருந்து 60 வரை உள்ள காலகட்டத்தில் நடக்கும். மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடும். இந்த காலகட்டத்தில் பெண்களின் பாலின பண்பிற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பது குறைகிறது. இந்த உதிரப்போக்கு குறையும் போது வலி ஏற்படுவதும் குறைகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்