வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாலி கட்டி 15 நாள்தான் ஆச்சு.. மனைவிக்கு குவா குவா.. அலறி ஓடிய புது மாப்பிள்ளை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

தாலி கட்டி 15 நாள்தான் ஆச்சு.. மனைவிக்கு குவா குவா.. அலறி ஓடிய புது மாப்பிள்ளைதிருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறல்

ஊத்தங்கரை: திருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரை அருகே வசித்து வருபவர் அஜிஸ். இவருக்கும் பர்வீன் பானு என்பவருக்கும் 15 நாளுக்கு முன்னாடிதான் கல்யாணம் நடைபெற்றது. பர்வீன் பானு தர்மபுரியை சேர்ந்தவர். இரு வீட்டு நபர்கள் மற்றும் பொண்ணு, மாப்பிள்ளை சம்மதத்துடன்தான் திருமணம் நடைபெற்றது.

யாருடனும் பேசவில்லை 
 கல்யாணம் முடிஞ்சு அஜீஸ் வீட்டுக்கு வந்த பர்வீன் பானுவின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. அதோடு கல்யாணம் முடித்த மறுநாளிலிருந்தே வயிற்று, வயிற்று வலி என்று சொல்லியே வந்திருக்கிறார் பர்வீன். இதனால் 15 நாளாக யாருடனும் சரியாக பேசக்கூட இல்லையாம். கல்யாணம் முடிஞ்சு அஜீஸ் வீட்டுக்கு வந்த பர்வீன் பானுவின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. அதோடு கல்யாணம் முடித்த மறுநாளிலிருந்தே வயிற்று, வயிற்று வலி என்று சொல்லியே வந்திருக்கிறார் பர்வீன். இதனால் 15 நாளாக யாருடனும் சரியாக பேசக்கூட இல்லையாம். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

நிறைமாத கர்ப்பம்

இந்த நிலையில் நேற்று இரவு பர்வீனுக்கு வயிற்று வலி அதிகமாகவிட்டது. இதனால் பதறிப்போன மாப்பிள்ளை மனைவியை அழைத்து கொண்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனயில் கொண்டு போய் சேர்த்தார். அப்போது பர்வீனை செக்கப் செய்த டாக்டர்கள், நிறைமாத கர்ப்பம் என்ற ஒரு குண்டை தூக்கி புது மாப்பிள்ளை தலையில் போட்டார்கள். அதோடு, 'கொஞ்சம் நேரம் இருங்க. குழந்தை பிறந்துடும்' என்றார்கள்.


அழகான ஆண் குழந்தை 
 இதைக் கேட்டதும் அலறி அடித்து கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே தலைதெறிக்க ஓடிவந்தார் மாப்பிள்ளை. பின்னர் பர்வீனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையிலேயே கொல்லவும் பர்வீன் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

மாப்பிள்ளை எங்கே?
இறுதியாக குழந்தை மருத்துவமனை நிர்வாகம் பிறப்பு பதிவு சான்றிதழை தயார் செய்ய முனைந்தனர். அதற்காக பெண்ணின் கணவரை ஆஸ்பத்திரி முழுக்க தேடினர். மாப்பிள்ளையை எங்கயும் காணோம். அதனால், பர்வீனின் உறவினர்களை அழைத்து மருத்துவமனை தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே பதறியடித்து ஓடிபோன மாப்பிள்ளை போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment