வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-04-19
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 28, 2020

அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பாக நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் | Acharapakkam Town Panchayat Corona Relief

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பாக 204 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி தலைமையில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் வார்டு 2 மற்றும் 3-க்குட்பட்ட பழைய காலணி, வண்டிக்குப்பம் காலணி, கோதண்டம் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளைச் சார்ந்த 204 நலிவடைந்த குடும்பத்தினர்கள் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும் பொருளாதாரச் சுமையால் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பாக வெங்காயம், தக்காளி அடங்கிய தலா 3 கிலோ காய்கறிகள், 5 கிலோ அரிசி உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி முன்னின்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கே.பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பட்டாபி, முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வேலவன், தமிழ் மாநில காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஷாஜகான், புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளர் சரத்குமார், புரட்சிபாரதம் நகரச் செயலாளர் விஜயகுமார் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் சைமன், நவரத்தினம், சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய கொரோனா நிவாரண உதவிகள் | Pattipulam Congress Persons Giving Corona Relief

144 தடை உத்தரவால் வீட்டுக்குள்ளேயே வருமானம் இன்றி முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரணப்பொருள் வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 1500 குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 


இதில் கலந்து கொண்டு இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி துவக்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் பெ.விஸ்வநாதன் தமிழக அரசால் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. 

எனவே அதனை உயர்த்தி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்கிடவேண்டும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் போர்க்கால அடிப்படையில் கொரோனாவை ஒழிக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நிகழ்வில் சிவராமன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிவராமன், திருப்போரூர் வட்டார மீனவரணி தலைவர் தனசேகர், திருப்போரூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர். பன்னீர்செல்வம் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருக்கழுக்குன்றத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த தெரு கூத்து நிகழ்ச்சி | Corona Awareness program in Thirukazhukundram

கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி ஆர் சிலையருகேயும் , மார்க்கெட் பகுதியிலும் 26.04.2020 அன்று காலை 10.00 மணியளவில் கொரோனா விழிப்புணர்வு தெரு கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.



காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


ஜம்பேரி கிராமம் ஓம் ஸ்ரீ மாதா கன்னீகா பரமேஸ்வரி கலை நிகழ்ச்சி நாடக சபா குழவினர் மூலம் நடைப்பெற்ற இந்த தெரு கூத்து நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும் தனித்திரு விலகியிரு வீட்டில் இரு என அறிவுறுத்தியும் கலை நிகழ்ச்சியினர் ஆடி பாடியும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர் போல் வேடமணிந்தும்.




நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் நிகழ்ச்சியை  பார்வையிட்டனர். தெரு கூத்து களைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வழங்கினார்.


இதில் முன்னால் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்பிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாம்பாக்கம் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Monday, April 27, 2020

மதுராந்தகம் வட்டார விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி | Madurantakam MLA carrying about Farmers Issues


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஆனால், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் பயிர்களை உரிய நேரத்தில் எடை போட்டு கொள்முதல் நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட செண்டிவாக்கம், மோகல்வாடி, வேடந்தாங்கல், மொறப்பாக்கம், ஏரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை விற்பனைக்காக கொண்டுவந்துள்ள தருணத்தில் உரிய நேரத்தில் மூட்டை கட்டாமலும், எடை போடாமலும் அதிகாரிகள் காலதாமதப்படுத்தியுள்ளனர். 
கொரோனா ஊரடங்கு காரணத்தினால் விவசாயிகள் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் இந்த தருணத்தில் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளமால் உள்ளதே இதற்கெல்லாம் காரணம் என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
மேலும், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெய்த திடீர் மழையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத நெற்பயிர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழைநீரில் நனைந்து சேதமாகின. 
இதனால் விவாசயிகள் மனமுடைந்ததை அறிந்த மதுராந்தகம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தியதோடு விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக இன்று (27.04.2020) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸை சந்திந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி, விவசாயிகளின் துயரைப் போக்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைந்து நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்கள் எந்த நேரத்தில் வரும் என்பதை முன்கூட்டியே நம்மால் அறிய இயலாத காரணத்தினால் இந்த பணிகளை விரைந்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும், இதற்குண்டான பணப்பட்டுவாடாவை விரைந்து விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரினார். 
மேலும், மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த இரு வாரங்களுக்கு முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Saturday, April 25, 2020

சுகாதாரப் பணிகளை விரைந்து முடித்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி நிர்வாகம் | Venkatesapuram Sanitizering work by APM Town PT


மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிப் பகுதிக்குட்பட்ட வெங்கடேசபுரம் ஊராட்சியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் இருந்தது.
இதுகுறித்து அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் புகார் பதிவேட்டில் வெங்கடேசபுரம் கிராம மக்கள் புகார் எழுதியிருந்த நிலையில், 2 நாட்களுக்குள் அனைத்து கால்வாய்களையும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த பணிகளை விரைந்து செய்ததை வெங்கடேசபுரம் கிராம மக்கள் பாரட்டினர்.
 


Thursday, April 23, 2020

மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் திருக்கோயில் பணியளார்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Acharapakkam Corona Relief


மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் பணியாற்றுபவர்களுக்கு ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக தலா 20 கிலோ அரிசி மற்றும் பருப்பு ஆகியவை கொரோனா நிவாரணமாக வழக்கப்பட்டது.
கோயில் வளாகங்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள தருணத்தில் அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.