வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest child Murder News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest child Murder News. Show all posts
Showing posts with label Latest child Murder News. Show all posts

Tuesday, July 09, 2019

மனைவியுடன் சண்டை.. 7 வயசு மகளை அடித்தே கொன்ற கொடூர தந்தை

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அநியாயமாக 7 வயசு மகளை அடித்தே கொன்றுவிட்டார் கொடூர குடிகார தந்தை! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை பூத்தோட்டதெருவை சேர்ந்தவர் கைலாசம். இவருக்கு திருமணமாகி இவருக்கு மகள்கள் உள்ளனர்.


37 வயதாகிறது. பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீலாவதி. இவர்களுக்கு 13 வயதில் ஐஸ்வர்யா, 7 வயதில் சுகிர்தா என்ற மகள்கள் உள்ளன. சுகிர்தா சிங்கையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.


குடிபோதை
கைலாசத்திற்கு தினமும் குடிக்காவிட்டால் பொழுது போகாது. அதிலும் குடித்துவிட்டு மனைவியையும், 2 குழந்தைகளையும் வெளுத்து விட்டுதான் தூங்கவே போவார். இப்படியேதான் வழக்கமாக வைத்திருந்து இருக்கிறார்.



சுருண்டு விழுந்தாள் 
 இப்படித்தான் நேற்று இரவும் தண்ணி அடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பா-அம்மா சண்டை போடுவதை பார்த்து மிரண்ட குழந்தை சுகிர்தா அவர்கள் நடுவே சென்றாள். இதில் மண்டை நிறைய போதையிலும், சண்டை போட்ட ஆத்திரத்திலும் இருந்த கைலாசம், சுகிர்தாவை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார். இதில் சுகிர்தா அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கமாகி விட்டாள்.




உயிர் பிரிந்தது 
இதனைகண்டு பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே சுகிர்தா இறந்துவிட்டாள். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட்டால், பிரச்சனை ஏற்படும் என்பதை அறிந்த தம்பதி கொலையை மறைக்க முடிவு செய்தனர்


பின்னர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடி அப்பகுதியினரை நம்ப வைத்தனர். மேலும் இறுதிச் சடங்கு செய்வதற்கும் முயற்சி செய்தனர்.



கைது 
 ஆனால் சிவகங்கை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.




Wednesday, March 20, 2019

பிரசவத்தின்போது குழந்தை தலையை பிய்த்து எடுத்த நர்ஸ்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரிலுள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு நேற்று இரவு நிறைமாத கர்ப்பிணி பொம்மி என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால், அப்போது மருத்துவர் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கே பணியிலிருந்த செவிலியர்கள் பேறுகாலம் பார்த்துள்ளனர். சுக பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.


குழந்தையும் வெளியேவர ஆரம்பித்தது. ஆனால், அனுபவம் இல்லாத செவிலியர்கள், குழந்தையின் தலையை தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர். இதனால் அந்த சிசு பரிதாபமாக பலியானது. இதனிடையே பொம்மியின் உடலுக்குள் மாட்டிக்கொண்ட, குழந்தையின் உடல்பகுதியை போராடி மீட்ட செவிலியர்கள், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பொம்மியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார், 30 கிராம, மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாத நிலை நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Monday, March 18, 2019

பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை

கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


இந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

Monday, December 24, 2018

பால் குடித்துவிட்டு தூங்கிய பெண் குழந்தை பலி.. மூச்சுத்திணறலா? பெண் சிசு கொலையா?



கொருக்குப்பேட்டையில் பால் குடித்துவிட்டு தூங்கிய 2 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொருக்குப்பேட்டை சிபி ரோடு ரயில்வே காலனி குடிசை பகுதியை சேர்ந்தவர் மணி (28). இவருடைய மனைவி தேவி (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கடந்த அக்டோபர் மாதம் இவர்களுக்கு 3 ஆவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு

காலையில் எழுந்து குழந்தையை குளிக்க வைப்பதற்காக தூக்கியபோது குழந்தை எந்தவித அசைவும் கொடுக்காததால் பதறியடித்து கொண்டு உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு  

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்.கே. நகர் போலீஸார் விரைந்து குழந்தையின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

காரணம்  

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே குழந்தையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

பரபரப்பு  

பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதா அல்லது ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் இருக்க மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்ததால் திட்டமிட்டு கொல்லப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, December 07, 2018

மனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்..



கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகிவிட்டார். 

 
கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி- பத்பநாபன் தம்பதியினர். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குடும்பச் சண்டை  
இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து தகவல் தெரிவித்து போலீஸார் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு வந்து பேசி சமரசம் செய்து கொள்ள கூறினர்.


தன்னுடன் இருக்க  
பின்னர் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பத்மநாபன் இரு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கிவிட்டார். குழந்தைகளை அனுப்புமாறு செல்வராணி கேட்டதற்கு அவர்கள் தன்னுடன் இருக்கட்டும் என பத்மநாபன் கூறிவிட்டார்.

போலீஸுக்கு தகவல் 
இந்த நிலையில் காலை வீட்டுக்கு வந்து பார்க்கும்போது இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செல்வராணி. பின்னர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.


பரபரப்பு போலீஸார் 
விசாரணையில் இரு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Wednesday, December 05, 2018

2 கணவர்கள்.. மாறி மாறி சண்டை.. கோபத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்!



கள்ளக்காதல் பண்ணி தொலைக்கிறவங்க எல்லாம் குழந்தைகளையே சாகடிச்சிட்டு வருவது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தற்போதுகூட கரூர் மாவட்டத்தில் ஒரு தாய், தன் குழந்தையை இப்படித்தான் கொலை செய்துள்ளார்.

குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை - ரம்யா. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்தான். இவங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆனாலும், எப்பவுமே பிரச்சனை குடும்பத்தில் தாண்டவமாடி கொண்டே வந்தது. இதற்கு காரணம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறனை ரம்யா விரும்பியதுதான். இதில் இருவரும் நெருக்கமாகவே கர்ப்பமுமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது.


மணிமாறன் 
எந்த கணவனால் இதை பொறுத்து கொள்ள முடியும்? அதனால்தான் பிரச்சனை வெடித்தது. நித்தம் சண்டையும் தகராறுமாகத்தான் போனது. கடைசியில் ரம்யா குழந்தையை தூக்கி கொண்டு மணிமாறனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

2-வது புருஷன் 
ஆனால் அப்போதும் ரம்யாவுக்கு நிம்மதி இல்லை. இப்போது பெண் குழந்தை வேதவர்ஷினிக்கு வயது 3. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை.. உனக்கு நான் 2-வது புருஷன்தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் பண்ணிப்பே" என்றெல்லாம் பேசி ரம்யாவுடன் சண்டை போட்டே வந்துள்ளார்.


மனசு வரவில்லை 
2-வது புருஷனுக்கு முதல் புருஷனே பரவாயில்லை என்று நினைத்து, மனம் திருந்தி திரும்பவும் கணவனிடம் சென்றிருக்கிறார். தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் தம்பிதுரையோ, குழந்தையுடன் நின்ற ரம்யாவை ஏற்க மனசில்லாமல் அதற்கு ஒத்து கொள்ளவே இல்லை.
காலால் மிதித்தார் இதனால் ஏற்கனவே மனம் நொடிந்து கொண்ட ரம்யாவுக்கு குழந்தைமேல் கோபம் வந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று தன் அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக்கொண்டு தன் குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

காலால் மிதித்தார் 
இதனால் ஏற்கனவே மனம் நொடிந்து கொண்ட ரம்யாவுக்கு குழந்தைமேல் கோபம் வந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று தன் அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக்கொண்டு தன் குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.


குழந்தையின் சடலம் 
ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல் குளித்தலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை பெற்ற தாயே இறுக்கி கொன்றதை மட்டும் இன்னும் யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Sunday, December 02, 2018

குளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்!



திண்டிவனம் அருகே குளத்தில் குளித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 4 பேரும் அக்கா - தம்பிகள் என்பது மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.


திண்டிவனம் அருகே உள்ளது தளவாதி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மகள் அபிராமி. அங்குள்ள பள்ளி ஒன்றில் அபிராமி பிளஸ் 2 படித்து வருகிறார்.
 

இவர் தனது தம்பி திருமுருகனை அழைத்து கொண்டு குளித்தில் குளிக்க சென்றார். அப்போது முனுசாமி என்பவரின் மகள் அஸ்வினியும் அவரது தம்பி ஆகாஷூம் குளிக்க உடன் வந்தார்கள். அஸ்வினிக்கு வயது 15, ஆகாஷுக்கு வயது 9 ஆகிறது. 2 அக்கா, 2 தம்பிகள் ஒன்றாக சேர்ந்து குளிக்க தொடங்கினார்கள். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அப்போது 4 மாணவர்களுமே குளத்தில் மூழ்கி திடீரென மாயமானார்கள். குளிக்க வந்த பிள்ளைகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று குளத்துக்கு வந்து பார்த்தால் அவர்களை காணவில்லை. இதனால் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என 4 போரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது
 

நீண்ட நேரத்துக்கு பின்பு 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். குளத்தில் நிறைய சேர் இருந்ததால், பிள்ளைகள் சிக்கி கொண்டுள்ளார்கள். இதனால் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
அக்கா-தம்பிகளான இந்த 4 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Saturday, November 17, 2018

மட்டன் சமைக்க தாமதம் - 4 வயது மகளை அடித்துக் கொன்ற கொடூரத் தந்தை!



மட்டன் சமைத்து தர தாமதம் செய்ததால் மனைவி மீது கோபம் கொண்ட கணவர், நான்கு வயது மகளைக் கொலை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பீகாரின் பகிர்டோலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாம்பு லால் சர்மா (40). குஜராத்தில் வேலை பார்த்து வந்த சாம்பு, திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த புதனன்று, மட்டன் சமைக்கும்படி தன் மனைவியிடம் கூறியிருந்தார் சாம்பு.


ஆனால், உணவைச் சமைக்க தாமதமானது. இதனால் மனைவி மீது சாம்புவிற்கு கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் தனது நான்கு வயது மகளை அவர் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். ஆனால், சாம்புவை சுற்றி வளைத்த மக்கள், போலீசிடம் அவரை ஒப்படைத்தனர். தற்போது சாம்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts