Run World Media: 2019

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 30, 2019

போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினேனா? நடிகை விளக்கம் | Did a beer bottle hit the intoxicated producer?

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா. சஞ்சனா தற்போது போடா முண்டம் தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அவர் மீது பெண் தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் சஞ்சனாவும், வந்தனாவும் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றவே சஞ்சனா வந்தனாவை பீர் பாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. சஞ்சனா தன்னை தாக்கியதாக வந்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சஞ்சனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
 
பிரச்சனை
 பாார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை. நான் தாக்கியதாக கூறும் அந்த பெண்ணிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர் என் அம்மா, குடும்பத்தாரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார். 
அதனால் நான் திட்டியதற்கு என்னை கைது செய்ய வைப்பதாக மிரட்டினார். என் கெரியரை நாசமாக்கி, என் பெயரை கெடுத்து, என் குடும்பத்தாரை காலி செய்து, என்னை சிறையில் தள்ளுவதாக மிரட்டினார்.
சினிமா
அவர் எப்பொழுதுமே சீப்பாக விளம்பரம் தேட விரும்புவார். அதனால் ஒரு முடிவுக்கு வரும் முன்பு அவரை பற்றி தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் கடுமையாக உழைக்கிறேன். எனக்கு உழைப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 
என் செல்போனை பறித்துக் கொண்டு, என் கையை பிடித்து அவர் முறுக்கிய வீடியோ தான் சான்று. அந்த வீடியோவில் அவர் முகத்தில் ஏதாவது காயம் உள்ளதா?. பாட்டில் உடைக்கப்பட்டால் காயமோ, ரத்தமோ இருக்கும். அது போன்று பொறுப்பில்லாமல் நான் நடந்து கொள்ள மாட்டேன். இது என் பெயரை கெடுக்கும் சதி என்று தெரிவித்துள்ளார் சஞ்சனா.

ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி | Collage Girl participating as candidate in LB Election at Thiruthani

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகள் தா.நிவேதா, 21, என்பவர், போட்டியிட்டுள்ளார்.
இவர், சென்னை காய்தே மில்லத் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று, எஸ்.அக்ரஹாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஓட்டு போட்டார்.ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்காக தான் கல்லுாரியில் படிக்கும் போதே, உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு உள்ளேன்.


ஒராண்டிற்குள், மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவேன் என, அவர் தெரிவித்தார். நிவேதாவின் தந்தை, அ.தி.மு.க., கட்சியில், கடந்த, 35 ஆண்டுகளாக உள்ளார். தற்போது ஒன்றிய கழக பொருளாளராக உள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியவர் கைது | Child Pornography person was arrested

'இன்ஸ்டாகிராம்' வலைப்பக்கத்தில், பெண்ணாக பேசி, 16 வயது சிறுமியை சீரழிக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.அண்ணாநகரைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், 'அண்ணாநகரைச் சேர்ந்த மகேஷ், தன் மகளின் இன்ஸ்டாகிராம் கணக்கில், பெண்ணை போல் பேசி, நட்பாக பழகி உள்ளார்.'பழக்கத்தை வைத்து, ஆபாச வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால், தன் மகள், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.


மகேஷ் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகேஷை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:மகேஷ், இன்ஸ்டாகிராம் வாயிலாக, சிறுமியுடன் நட்பாக பழகி உள்ளார்.


ஆனால், சிறுமி, மகேஷின் பேச்சுக்கு பிடி கொடுக்கவில்லை. இதனால், சிறுமியை எப்படியாவது தன் வசம் ஈர்க்க திட்டம் தீட்டிஉள்ளார்.அதன்படி, பெண்ணாக சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார்.பின், நெருக்கமான நட்பை வைத்து, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, அவர் குளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆபாச வீடியோவை மகேஷ் எடுத்து உள்ளார்.


பின், ஆபாச வீடியோவை வைத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


30.12.2019 Tamil Latest News | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
 1. போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கினேனா? நடிகை விளக்கம்
 2. ஊராட்சி தேர்தலில் கல்லூரி மாணவி போட்டி
 3. மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி
 4. ஆபாச வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியவர் கைது
 5. ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி
 6. 10th, +2 தனித்தேர்வர்கள் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்..?
 7. தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது 
 8. வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? 
 9. பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு 
 10. டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்

ஊத்துக்காடு அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி | Oothukadu Bike Bus Accident

அரசு பஸ் மீது, இருசக்கர வாகனம் மோதியதில், இருவர் இறந்தனர்.வாலாஜாபாதில் இருந்து, படப்பை நோக்கி, நேற்று, இரவு 8:00 மணி அளவில், ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது.அதே வழித்தடத்தில், அரசு பஸ் தடம் எண்: 79, தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஊத்துக்காடு கூட்டு சாலை அருகே சென்றபோது, இந்த இருசக்கர வாகனம், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர், செஞ்சி அடுத்த, கரடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, 39. என, தெரிய வந்துள்ளது. அவருடன் சென்ற உறவினர் பெண் ஒருவரும் இறந்தார்.


மாமல்லபுரம் அருகே கார் மோதி முதியவர் பலி | Old man died in Mahabalipuram Car Accident

மாமல்லபுரம் அருகே, கார் மோதி, முதியவர் இறந்தார்.மதுராந்தகம் அடுத்த, கே.கே.புதுாரைச் சேர்ந்த, வேதநாயகம் மகன் ஆசிர்வாதம், 55. மாட்டுக்கறி வியாபாரி.நேற்று மாலை, மாமல்லபுரம் அடுத்த, கிருஷ்ணன்காரணை பகுதியில், மாடு வாங்க வந்தார்.மாலை, 5:30 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து, சென்னை சென்று கொண்டிருந்த கார், அவர் மீது மோதியதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Sunday, December 29, 2019

டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்....! நடந்தது என்ன..? Daughter suside due to her mother order

டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 32.அதேப்பகுதியை சேர்ந்த பாபு மகள் அப்சல்யா, 25; என்பவரை 6 ஆண்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள் உள்ளனர்.அப்சல்யா தாய் வீட்டிற்கு சென்று 'டிவி' பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று வழக்கம் போல் 11.30 மணிக்கு தாய் வீட்டில் 'டிவி' பார்த்துள்ளார்.


இதை அவருடைய தாய் பன்னீர்துளி, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு சமையல் செய்து உணவளிக்காமல் 'டிவி' பார்ப்பதை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், கணவர் வீட்டிற்கு சென்றவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தமன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சப் கலெக்டர் விசாரணையும் நடக்கிறது.

பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு | Pazhaverkadu Tea stall special awarness

பழவேற்காடு சாலையில் உள்ள டீக்கடை கரும்பலகையில், 'பன்றியின் விலையைவிட, மக்களது ஓட்டின் விலை குறைவு' என, உள்ளாட்சி தேர்தல் குறித்து, வித்தியாச விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டிருந்தது.பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.சேகர், 51, பழவேற்காடு சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.இவர், 25ஆண்டுகளாக, டீக்கடையில் கரும்பலகை வைத்து, பல்வேறு தகவல்களை எழுதி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தினமும், ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசங்களை எழுதி வருகிறார்.அதில், 'கோஷம் போட கோழி பிரியாணியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள்; வேஷம் போடாத வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வருகிறார்.


இதில் நேற்று, இன்றைய சந்தை மதிப்பு என்ற தலைப்பில், அவர் எழுதிய வாசகம், கடைக்கு வருவோரையும், அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் சிந்திக்க வைத்தது.

வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? Husband affected due to dowry torchar

திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி, 20. இவரது கணவர் சுப்ரமணி, 24. இருவரும், கடந்த, பிப்., 12ல், காதல் திருமணம் செய்து கொண்டனர்.ஸ்ருதியிடம், கணவர் சுப்ரமணி, மாமியார் கவிதா இருவரும், அடிக்கடி வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், அவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.


விசாரணை நடத்திய போலீசார், சுப்பிரமணியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக கவிதாவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது | Son murdering his father

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாபட்டை சேர்ந்தவர் பெருமாள், 67; இவருக்கு, முருகன், 40, லட்சுமணன், 38, சேகர், 36, என மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.அனைவருக்கும், திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். சேகரின் மனைவி சத்யா, 35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடால், சேகரை பிரிந்த சத்யா, தற்போது, வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.


மனைவி தன்னுடன் வாழாததற்கு, தந்தை பெருமாள் தான் காரணம் என, சேகர் அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தந்தை பெருமாளுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்றனர். நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த பெருமாளை, சேகர் அரிவாளால் தலை மற்றும் கழுத்தில் வெட்டினார்.


இதில், சம்பவ இடத்திலேயே பெருமாள் பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர், வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், பெருமாளின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 9 சேவை மையங்கள் | SSLC HSC Attempt and application centre

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும், 2020ல், மார்ச் மாதம் நடைபெறவுள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், வரும், ஜனவரி, 2, 3-ம் தேதிகளில், ஒன்பது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டசேவை மையங்களின் விபரம்
 1. சி.எஸ்.ஐ., கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
 2. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
 3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்
 4. புனித செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்


 1. டாக்டர் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
 2. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
 3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்
 4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார்
 5. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லுார்.

29.12.2019 Tamil Latest News | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
 1. 10th, +2 தனித்தேர்வர்கள் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்..?
 2. தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது 
 3. வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? 
 4. பழவேற்காடு டீக்கடையில் வித்தியாச விழிப்புணர்வு 
 5. டி.வி பார்ப்பதை கண்டித்த தாயால் தற்கொலை செய்துகொண்ட மகள்

Saturday, December 28, 2019

விடுதியில் விபசாரம் நடத்திய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை | Pondicherry House Prostitution

விபசார வழக்கில் பெண் ணுக்கு 4 ஆண்டும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2013ம் ஆண்டு விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெரியக்கடை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் கோட்டக்குப்பம், ஷேக் பஷீர்,30; என்பவரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட கொல்கத்தா மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு பெண்களும் கோர்ட் உத்தரவின்படி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மற்றவர்கள் மீது, புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், விபசாரம் நடத்திய காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 32 வயது பெண்ணிற்கு நான்காண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், விடுதி மேலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மற்ற ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டனர்.அரசு சார்பில் வழக்கறிஞர் பிரவீன்குமார் ஆஜரானார்.

செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி | Great died Old lady Donating eye in Ginjee

முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தைலம்மாள், 68; என்ற மூதாட்டியை மீட்டு சமூக நலத்துறையினர் செஞ்சியில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் தைலம்மாள் இறந்தார். அவரது கண்களை தானமாக வழங்க விடுதி நிர்வாகி நளினி முடிவுசெய்தார்.இதுகுறித்து செஞ்சி அரிமா சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


அவர்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டியின் கண்களை அகற்றி தானமாக பெற்றுச் சென்றனர்.ரோட்டரி சங்க தலைவர் இளங்கோவன், செயலர் சேகர், பொருளாளர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.

உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் | Ulundurpet school girl Kidnap News

உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண்ணைக் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா ஆண்டிகுழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.இவரது 17 வயது மகளை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தனது மகளை கூ.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வீரப்பன் மகன் எழிலரசன், 19; என்பவர் கடத்திச் சென்றதாக ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து எழிலரசனை கைது செய்தனர்.

வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர் | Candidate death in Sennavaram Vandavasi Taluk

வந்தவாசி அருகே, சுயேச்சை வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், சென்னாவரம் கிராம பஞ்சாயத்து, 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேண்டாமிர்தம், 54, என்பவர் போட்டியிட்டார். அவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டது. கடந்த, 23ல், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


எனவே, அந்த வார்டுக்கு, வரும், 30ல், நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி | 1 Crore Abase in Madurantakam

தீபாவளி சீட்டு நடத்தி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடைக்காரர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் அடுத்த, மேலவலளம்பேட்டையில், வாடகை வீட்டில் வசித்தவர், ராம்தேவ், 50; பூதுாரில் நகை கடை வைத்திருந்தார்.
இவர், பூதுாரை சுற்றியுள்ள ஈசூர், வள்ளிபுரம், தச்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 500 பேரிடம், மாதம், 1,000 ரூபாய்க்கு, தீபாவளி சீட்டு பிடித்தார்.கடந்த தீபாவளியின் போது, பணம் கட்டியவர்களுக்கு வழங்க வேண்டிய நகை மற்றும் பொருட்கள் வழங்காமல், காலம் கடத்தி வந்தார்.


கட்டிய பணத்திற்கான நகை மற்றும் பொருட்களை வழங்கும்படி நெருக்கடி கொடுத்த நிலையில், சில நாட்களாக, ராம்தேவ் வசித்த வீடும், கடையும் பூட்டியே கிடந்தன; அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.


இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சீட்டு கட்டிய கிராமத்தினர், 50க்கும் மேற்பட்டோர், 'ராம்தேவ், 1 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாகியுள்ளார். அவரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தரவேண்டும்' என, படாளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...? | Maraimalainagar Robbery News

மறைமலை நகரில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.மறைமலை நகர் சுற்று வட்டாரத்தில், சில நாட்களாக, வீடுகளில் துாங்கும் வாலிபர்களை தாக்கி, மொபைல் போன், மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.பாதிக்கப்பட்டோர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பொத்தேரி பகுதியில், ரோந்து பணியில் இருந்த போலீசாரை பார்த்து, இரண்டு, 'பல்சர்' இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்றன. இவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மல், 19, மேற்கு தாம்பரம் அனிமா பள்ளி தெரு கமல் பிரசாந்த், 21, என்பதும், தனியார் கல்லுாரியில் படிப்பதும் தெரிய வந்தது.இவர்களுடன் ரங்கநாதபுரம் கிஷோர், 20, வைத்தியேஷ்குமார், 21, ஆகியோரும், வீடுகளில் வசிப்போரை மிரட்டி, மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர்.


இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.'பிடிபட்ட மாணவர்களிடம், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு பின், வழிப்பறியில் கொள்ளை அடிக்கப்பட்ட விபரங்கள் வரும்' என, போலீசார் தெரிவித்தனர்.

மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு | Madurantakam Ganja News

மதுராந்தகம் அருகே, பாழடைந்த வீட்டு வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர், நுார்துசாமி, 65; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.இவர், கடந்த ஆண்டுகளில், மதுராந்தகம் அடுத்த காந்தி நகரில், குடிசை வீட்டில் வசித்தார். மதுராந்தகத்தில் சொந்தமாக மனை வாங்கி, வீடு கட்டி அங்கு வாழ்கிறார்.


இந்நிலையில், நுார்துசாமி வசித்த குடிசை வீடு, பாழடைந்து கிடந்தது. இதன் வாசலில், கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.நேரில் வந்து ஆய்வு செய்த போலீசார், வளர்ந்திருப்பது கஞ்சா செடி என்பதை உறுதி செய்தனர். ஆள் இல்லாத வீட்டில், கஞ்சா வளர்த்திருப்பது குறித்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tamil Latest News 28.12.2019 | இன்றைய தமிழ் செய்திகள் | Run World Media

இன்றைய முக்கிய செய்திகள் : 


கீழே உள்ள செய்திகளின் மீது கிளிக் செய்யவும்
 1. மதுராந்தகத்தில் வீட்டிலேயே கஞ்சா வளர்ப்பு
 2. மறைமலைநகரில் தொடர் வழிபறி | என்ன நடக்கிறது...?
 3. மதுராந்தகத்தில் 1 கோடி ரூபாய் மோசடி
 4. வந்தவாசி அருகே வேட்பாளர் பலி | தேர்தலை ஒத்தி வைத்தார் ஆட்சியர்.
 5. உளுந்தூர்பேட்டையில் 17 வயது மாணவி கடத்தல் 
 6. செஞ்சியில் கண்தானம் செய்த மூதாட்டி
 7. விடுதியில் விபசாரம் நடத்திய பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

Wednesday, December 25, 2019

மதுராந்தகத்தில் "தூணை பிளந்து காட்சியளிக்கும் ஶ்ரீஉக்கிரநரசிம்மர்" – தமிழகத்திலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார் | Madurantakam Soorakottai Lakshmi Narasimmar

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சூரக்கோட்டை ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில் ஶ்ரீஅனுமந் ஜெயந்தி நாளையொட்டி 108 பால்குட உற்சவ பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. 
இந்த விழாவில் கோயில் நிறுவனர் வேணுதாஸ் சுவாமிகள் தலைமையில் 25.12.2019 காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற மதுராந்தகம் ஶ்ரீஏரிகாத்தராமர் கோயில் குளத்தின் கரையிலிருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 
 
பின்னர், ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு 108 பால்குட அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. 
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் "தூணை பிளந்து காட்சி தரும் 43 அடி உயர ஶ்ரீஉக்கிரநரசிம்மர் தமிழ்நாட்டிலேயே இங்குதான் அருள்பாலிக்கிறார்". அவருக்கு எதிரே 21 அடி உயரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். 
மேலும், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த ஆனைக்குன்னம் ஶ்ரீசஞ்சீவிராயர் திருகோவிலிலும் அனுமந் ஜெயந்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

வேலாமூர் மாதா கோவிலில் விமர்சியாக நடைப்பெற்ற "கிறிஸ்துமஸ்" | Velamur Christmas Celebration | Ramapuram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் பங்கு, வேலாமூர் கிளைப்பங்கில் உள்ள மாதா கோவிலில்  கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகுவிமர்சியாக நடைபெற்றது. 


இரவு 2 மணியளவில் ஏசுகிறிஸ்து பிறப்பு திருப்பலி நிகழ்வு நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்வனாது பங்குத்தந்தை அருள்பணி.இம்மானுவேல் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் நடத்தினர். 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் உலக தாழ்ச்சி, உலக அமைதி, சமாதானம் நிலவவும் மக்கள் நல்ல முன்னேற்றமடையவும் பிராத்தனைகள் நடைப்பெற்றது. 


மேலும், சென்ற ஆண்டு நடந்த அனைத்து பிரச்சனைகளும், தீய பழக்க வழக்கங்களும் மாறி  மனமாற்றத்தோடு இந்த இனிய நாள்முதல் ஆண்டவன் சுகமளிக்கவேண்டும், இருப்பதை பகிர்ந்து வாழவேண்டும், தாழ்ச்சிடன் வாழவேண்டும் போன்ற செய்திகளோடு இந்த திருப்பலியானது 4மணியளவில் முடிவு பெற்றது. 

இத்திருநாளில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வேட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனர் டோமினிக் மற்றும் ஏகப்பன், அசோக்ராஜ், திவ்யநாதன், அலெக்சாண்டர், ஹேமாவதி, பிரேமா, பிரமிளா, நிர்மலா ஆகியோர்கள் பங்கேற்றனர். 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்