Run World Media: 12/23/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 23, 2019

இவரு பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க.. இதையெல்லாம் மாத்தமுடியாது.. பிரபல நடிகரை விளாசிய சின்மயி! Chinmayi YG Magendiran Fight

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல நடிகரை நடிகை சின்மயி சரமாரியாக விளாசியிருக்கிறார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்தப் போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது.
 

அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான இந்த போராட்டம் நாடு முழுவதும் பற்றியது. இதில் மாணவர்களும் இறங்க போராட்டம் வேற மாதிரியாக சென்றது.
 


எதிர்க்கட்சிகள்தான்

தமிழகத்திலும் போரட்டத் தீ பற்றியதால் அலர்ட்டான அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. எதிர்க்கட்சிகள்தான் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டி விடுவதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
 


சைட் அடிக்கவே

இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து பிரபல நடிகரான ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்றும் பெண்கள் சைட் அடிப்பார்கள் என்பதை மனதில் வைத்தே போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
 


சின்மயி விமர்சனம்

அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகியான சின்மயி ஒய்ஜி மகேந்திரனின் இந்த கருத்து குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
 


மாத்த முடியாது

அதாவது இந்த மனுஷர் சொல்லும் கருத்தையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அவர்களை மாற்ற முடியாது. அது நேர விரயம்தான் என்று சாடியிருக்கிறார்.நெட்டிசன் கருத்து

சின்மயின் இந்த கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. சின்மயின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு கவலையாக உள்ளது. அவருக்கும் மகள் மனைவி இருக்கிறார்கள்.. அவர்கள் எப்படி இதை பார்ப்பார்கள் என்று கேட்டிருக்கிறார்.
 


மீடூவில் புகார்

பாடகி சின்மயி, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரமேரூரில் குடும்ப அட்டைகளை தாசில்தாரிடம் வீசிய மக்கள் | Pazhaveri Quarrying of Stone Opposing News

போலீசார் பாதுகாப்புடன் கல் குவாரி இயக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பழவேரி கிராமத்தினர், குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை, உத்திரமேரூர் தாசில்தார் காலடியில் வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகே புதிய கல் குவாரி துவக்கப்பட்டது. இப்பகுதியில், ஏற்கனவே, பல குவாரிகள் இயக்கப்படுவதால், பகுதிமக்கள் அவதிப்படுகின்றனர்.இதனால், புதிய குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், நான்கு மாதங்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதியாக, கடந்த வாரம், 14ம் தேதி, குடியிருப்புகளை விட்டு, குடும்பத்தோடு மயானத்தில் குடியேறி, மூன்று நாட்களாக, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராடினர். 

வாக்குறுதி 
இதையடுத்து, 16ம் தேதி மாலை, மயானத்திற்கு வந்து மக்களை சந்தித்த காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன், 'கல்குவாரி தற்காலிகமாக செயல்படாது. மேற்கொண்டு,விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, கிராமத்தினர், வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், குவாரி துவங்க போவதை அறிந்த கிராமத்தினர், நேற்று முன்தினம், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, செங்கல்பட்டு டி.எஸ்.பி., கந்தன், படாளம் மற்றும் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பில், குவாரி நேற்று காலை இயங்கியது.அப்போது, 100 பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர், போலீசாரிடமும், குவாரி உரிமையாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, குவாரி இயக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆத்திரம்
இதனால், கடும் ஆத்திரமடைந்த கிராமத்தினர், வீடுகளில் இருந்த, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை எடுத்து சென்று, குவாரியில் இருந்த உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரனிடம் கொடுத்தனர்.அவர் வாங்க மறுத்ததையடுத்து, அந்த அட்டைகளை, தாசில்தார் காலடியில் வீசி, 'எங்களுக்கு, அரசின் அடையாளங்கள் தேவையில்லை' எனக்கூறிவிட்டு சென்றனர்.

குடும்ப அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.கல் குவாரி உரிமையாளருக்கு ஆதரவாக, மாவட்ட கலெக்டர், சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்படுவதாக, பழவேரி கிராமத்தினர் புகார் கூறினர்.'அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என, அவர்கள் கூறினர்.

மாமல்லபுரம் அருகே வேன் - பஸ் மோதல் - ஓட்டுனர் பலி | Mamallapuram Van Bus Accident News | Mahabalipuram Bus Van Accident News

மாமல்லபுரம் அருகே, சரக்கு வேன், ஆம்னி பஸ், நேருக்கு நேர் மோதியதில், வேன் ஓட்டுனர் இறந்தார்.


மரக்காணம் பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, இளநீர் ஏற்றிய, 'ஈஷர்' வேன், சென்னை சென்று கொண்டிருந்தது.மரக்காணம் தாலுகா, எம்.புதுப்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் அய்யனாரப்பன், 39; ஓட்டினார். மற்றொருவர், உடன் பயணம் செய்தார்.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், இரவு, 10:45 மணிக்கு கடந்த போது, சென்னையிலிருந்து, வேதாரண்யத்திற்கு, பயணியருடன் சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதின.

இதில், வேன் ஓட்டுனர், வேனிலிருந்து துாக்கி எறியப்பட்டு, அங்கேயே இறந்தார். பின்னால் வந்த கார், பஸ்சின் மீது மோதியது. இதில், காரில் இருந்த நான்கு பேர், லேசான காயத்துடன் தப்பினர்; பஸ்சில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை.

பஸ் ஓட்டுனர் மகேந்திரன், மாமல்லபுரம் போலீசில், இது குறித்து புகார் அளித்தார்.விபத்தால், இத்தடத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார், விபத்து வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்