வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: November 2021
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 30, 2021

விளங்காடுபாக்கத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி | Vilangadupakkam Illam Thedi Kalvi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


மாதவரம் பகுதியில் உள்ள செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வழக்கறிஞர் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்கள் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க கிராம அளவில் கண்காணிப்பு குழு | காஞ்சி ஆட்சியர் தகவல் | Illegal Land Occupied Supervising Team | Kancheepuram District | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தமிழக முதலமைச்சர் அவர்களின் காணொளி ஆய்வுக் கூட்டத்தின் அறிவுறுத்தலின்படி, நீர்நிலை புறம்போக்கு ஏரி, ஏரிக்கரை, குளம், குட்டை, நீர்பிடி, ஓடை, ஊரணி, கால்வாய், ஏந்தல், ஆறு, தாங்கல், வாய்க்கால், கிணறு மற்றும் இதர நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதியதாக ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்தவும் உடனடியாக வட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த கிராம அளவில் ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


அக்குழுவில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் பாசன உதவியாளர், நீர்வள ஆதாரத்துறை, சமூக ஆர்வலர் / தன்னார்வலர்கள் / முதல்நிலை பொறுப்பாளர்கள் ஆகியோரை வட்டாட்சியரால் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இக்குழுவானது நீர்நிலை புறம்போக்குகளில் புதியதாக ஏதேனும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிப்பது, புதிய ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவது மற்றும் இவ்விவரத்தினை உடனடியாக வட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர். 

மேற்படி கிராம அளவிலான ஆக்கிரமிப்பு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை). காவல் ஆய்வாளர் ஆகியோர்களை கொண்டு வட்ட அளவில் கண்காணிப்புக் குழு நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் புதிய ஆக்கிரமிப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.


தொலைபேசி எண்.: 04427237107 , 0442723 7207


கைபேசி எண்: 93454 40662

பழைய காதலியுடன் செம்ம நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் சிம்பு | Actor Simbu STR Romance with his Old Lover | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி கடைசியாக தமிழில் 100 திரைப் படத்தில் நடித்திருந்த ஹன்சிகா மோத்வானி இப்பொழுது தனது 50-வது திரைப்படமான மஹாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளார் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ள மஹா திரைப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்க இப்பொழுது ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானியின் 50வது திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷலாக தயாராகிவருகிறது.


இதுவரை ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்த ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கியுள்ளார். மஹா ஹன்சிகா மோத்வானி 50வது திரைப்படம் என்பதால் படக்குழு பார்த்து பார்த்து இப்படத்தை உருவாக்கி வருகிறது.


மஹா பட போஸ்டர் வெளியானது முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு இருக்க மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். வாலு படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட குறுகிய காலத்திலேயே இருவரும் காதலை முறித்துக் கொண்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.


ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் இதனால் நீண்ட வருடங்களாக இணைந்து நடிக்காமல் இருந்த ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு மீண்டும் மஹா திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மஹா டீசர் ஏற்கனவே ஏற்கனவே வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்றது. டீசலில் இருந்து இந்த திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படம் என தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் மஹா படக்குழு ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் ஐ.பி.எஸ் நியமனம் | Chengalpattu District New SP Aravindh IPS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.பி-யாக பணிபுரிந்த அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

பெண் வி.ஏ.ஓ., பொதுமக்கள் முன்னிலையில் பணியை ராஜினாமா | குன்றத்தூர் அருகே பரபரப்பு | Lady VAO Giving Resigning Letter in front of Public | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமக்கள் முன்னிலையில் பெண் வி. ஏ. ஓ. , வை ஒருமையில் பேசி திட்டியதால், பெண் வி. ஏ. ஓ. , பணியை ராஜினாமா செய்து கடிதம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, கொளப்பாக்கம் கிராமத்தில் மழை நீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நேற்று சென்றார். அப்போது கொளப்பாக்கம் கிராமம் புல எண் 212ல் வழங்கப்பட்ட பட்டா குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு வி. ஏ. ஓ. , பாரதி சரியான பதில் அளிக்க சற்று தடுமாறியதாக கூறப்படுகிறது.


இதனால், கோபம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தனது கைகளை உயர்த்தி, பெண் வி. ஏ. ஓ. , பாரதியை பொதுமக்கள் முன்னிலையில், ஒருமையில் பேசி, திட்டியாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வி. ஏ. ஓ. , பாரதி, தன் பணியை ராஜினாமா செய்கிறேன் என ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரனிடம் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று கடிதம் வழங்கினார். 

அந்த கடிதத்தில், 'என்னை பெண் கிராம நிர்வாக அலுவலர் என்றும் பார்க்காமல் பொதுமக்கள் முன்னிலையில், அவமானம்படுத்தம் படி பேசியது எனக்கு மிகுந்த மன வேதனையும், மன உளைச்சலையும் தருகிறது. 'எனவே, நான் அதிகாரிகளின் மிரட்டும் போக்கினால் மன உளைச்சளில் இருப்பதால் எனது பணியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட்சிட்டி ஊழலை மத்திய அரசு ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் | Puthiya Thamizhagam Dr.Krishnasamy Raising Question about Smart City Corruption | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஸ்மார்ட் சிட்டியில் நடைபெற்ற ஊழலை மத்திய அரசு தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

மதுரையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் ஐந்து மாவட்ட மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்க வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் காரணமாக முக்கிய நகரங்கள் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை மத்திய அரசு தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் அதுவரை ஸ்மார்ட் சிட்டிகான நிதியினை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.


விவாகரத்து வழக்கில் சாதகமாக செயல்பட 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தற்காலிக பெண் ஊழியர் | 25000 Corruption by Lady Temporary staff in Kancheepuram District | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ண பிரசாத் மீது அவரது மனைவி அர்ச்சனா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை என புகார் அளித்திருந்தார்‌.

அந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க தாம்பரம் மகளிர் காவல் நிலையம் காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகாரை அனுப்பி இருந்தது.

அந்த புகாரை விசாரித்து கிருஷ்ண பிரசாத்துக்கு சாதகமாக ஒரு தலைபட்சமாக தனது அறிக்கையை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க கிருஷ்ணா பிரசாத்திடம் சமூகநலத்துறை அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்து வரும் பிரேமா என்பவர் கிருஷ்ணபிரசாத் இடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்.
50 ஆயிரம் ரூபாயில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் கிருஷ்ண பிரசாத்திடம் இருந்து பிரேமா வாங்கும் போது கையும் களவுமாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு சமூகநலத்துறை அலுவலகத்தில் மற்ற அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பேர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கிய தி.மு.க-வினர் | Acharapakkam Union DMK | Perumber Kandigai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லத்தில் தி.மு.க-வினர் மதிய உணவு வழங்கினர்.

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கு.ராம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிழ்ச்சியானது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அவர்களின்  தலைமையிலும், அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான  கே.கண்ணன் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவிலான தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.







பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | BJP Protest at Erode | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஈரோடு பாரதிய ஜனதா கட்சி OBC அணி - அமைப்பு சாரா பிரிவு சார்பாக மாவட்டதலைவர் சிவசங்கரன் தலைமையில் பெட்ரோல் , டீசல் விலையைக் குறைக்க வேண்டி வீரப்பன்சத்திரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி, OBC அணி மாநில செயலாளர் ரவி பாலா , மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் NP.பழனிச்சாமி , மாநில துணைத்தலைவர் விநாயமூர்த்தி , மாவட்டதலைவர் சிவசுப்பிமணி , அரசு பிரிவு தொடர்பு செயலாளர் செல்வமணி , கேசவன் , சென்னிமலை AVM ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

பவுஞ்சூரில் அடகு கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை | Pavunjur Pawn Broker Shop Robbery | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பஜாரில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா அடகு கடை என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் துளையிட்ட மர்மநபர்கள் உள்ளே சென்று ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களை எடுத்துள்ளனர். மேலும் கடையில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் விட்டு சென்றனர்.  இதனால் லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகை தப்பியது.

இலத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நேற்று 50க்கும் மேற்பட்ட போலீசார் பவுஞ்சூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போலீசார் பலர் அப்பகுதியில் இருந்தபோதிலும் கடையில் துளையிட்டு திருடி சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் அருகில் உள்ள கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுவற்றில் துளையிட்டு மற்றொரு அடகு கடையில் 45 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, November 29, 2021

874 ஏரிகள் ஹவுஸ் ஃபுல் | நீரால் நிரம்பிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் | All Lakes in Kancheepuram and Chengalpattu Districts are Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு மண்டலத்தால் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் பாலாறு உப வடி நில கோட்டத்தின் கீழ் உள்ள 1022 ஏரிகளில் 941 ஏரிகள் நிரம்பி வழிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 355 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், 25 ஏரிகள் 70 சதவீதத்திற்கு அதிகமாக நிரம்பியுள்ளன. இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 519 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 9 ஏரிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியுள்ளன. பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளான மாகரல், திருமுக்கூடல் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி நீர்வீழ்ச்சிபோல் உபரிநீர் வெளியேறுகிறது.

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் யூனியன் கட்டுப்பாட்டிலுள்ள 293 ஏரி மற்றும் குளங்கள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், உடையும் தருவாயில் இருந்த பல்வேறு ஏரிகளின் கரைகள் உடையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் மூட்டைகள் கட்டிப்போட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாலாற்றில் இதுவரை இல்லாத அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வல்லிபுரம் பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஊராட்சிக்கு குடிநீர் வழங்க பாலாற்றில் போடப்பட்டிருந்த மோட்டார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால், ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு பகுதிகளில் புதிய போர்கள் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பாபுராயன்பேட்டையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருமனதாக தேர்வு | Baburayanpettai Vice President | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாபுராயன்பேட்டை ஊராட்சியில் உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்தினார். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நவநீதம் மற்றும் 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 1 வார்டு உறுப்பினர் வாக்களிக்க வரவில்லை. 

மீதமுள்ள ஐந்து உறுப்பினர்களும் தேர்தலில் பங்கேற்றனர். இதில் 2 வது வார்டு உறுப்பினர் கே.பக்தவச்சலம் போட்டியின்றி ஒரு மனதாக துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்திரமேரூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் | Uthiramerur Flood Inspection by Collector | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95 சதவீத பொதுப்பணித்துறை ஏரிகள் முழுமையடைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் , சாலை துண்டிப்பால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும் , தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருமான சுப்பிரமணியம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி உடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெருநகர் அடுத்த அனுமந்தண்டலம் பகுதியுள்ள தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டு செய்யாற்றில் செல்லும் நீரின் அளவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் நீர் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ள செய்யாறு தரை பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலக அறிவுறுத்தினார்.

இதையடுத்து திருப்புலிவனம் நீர்நிலைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் பொதுமக்களை தங்க வைத்துள்ள நிவாரணம் முகாமில் உள்ளவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் உரையாடினார். மேலும் உத்தரமேரூர் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொதுமக்களின் மருத்துவ சேவை தடையின்றி செயல்பட மருத்துவர்களுக்கும், வட்டாட்சியர் , அரசு அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேறும் பகுதிகளான வேடபாளையம், காட்டுப்பாக்கம், மேனநல்லூர் ஆகிய கிராம பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆற்றில் போடப்பட்டிருந்த கிராம போர்வெல் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் டேங்லாரி மூலம் கிராமங்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் குளோரின் கலந்து பாதுகாப்பான குடிநீர் வழங்க கிராம ஊராட்சி தலைவர்களை கேட்டு கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்.. தாயை இழந்த சிறுமிக்கு சோகம் | Krishnagiri Men Rapped Her Sister | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் ஜேசிபி இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விஜயின் தாய் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதால் அவருடைய சித்தி, அக்கா மகன் சோகத்தில் இருப்பதாக சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார்.

சித்தியின் 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கை என்றாலும் அவர் மீது ஆசை வைத்திருக்கிறார் விஜய். இதையடுத்து திட்டமிட்டபடி சித்தி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை வெளியில் கூட்டி செல்வதாக கூறி மறைவான இடத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அண்ணனின் திட்டத்தை உணர்ந்த தங்கை, "நான் உனக்கு தங்கை. என்னை விட்டு விடு" என்று கெஞ்சியுள்ளார். ஆனால், வெறி பிடித்த அவன், தங்கையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்தியிடம் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்..

இதையடுத்து சிறுமி நடந்ததை தன் தாயிடம் எடுத்து கூற பதறிப் போன அவர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய்யை கைது செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

வேலூரில் நில அதிர்வு | Vellore Mild Earthquake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு வேலூரின் தென்மேற்கு பகுதியில் 59 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் (National Centre of Seismology (NCS)) தெரிவித்துள்ளது.

சுங்குவார்சத்திரத்தில் கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை | Sunguvanchathiram Girl Firing | SV Chathiram | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்


காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததால், அதிருப்தியடைந்த கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார். ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் கிராமம் சீனிவாசப் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்.



இவர் மண்ணுார் டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 18 வயது மகள், காஞ்சிபுரம் சங்கரா கலை கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு திருமணம் நடத்த, பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகள், நேற்று முன்தினம் இரவு, மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை மீட்ட சுங்குவார்சத்திரம் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sunday, November 28, 2021

ஏரி கலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் மலர்தூவி வரவேற்பு | Muttavakkam Lake News | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

காஞ்சிபுரம் ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் ஏரி கலங்களில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகளுக்கு பின் பெருமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.


இதனையெடுத்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக பிரதிநிதி எம். எஸ். சுகுமார் அவர்கள் மகிழ்வுடன் மலர்தூவி நீரை வரவேற்றார்.
இந்நிகழ்வில் திமுகவினர் மற்றும் ஊர் மக்கள் குடும்பத்துடன் வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அபார்ட்மெண்ட் மாடியில் ஆடையின்றி கிடந்த இளம் பெண்ணின் உடல் - அதிர்ச்சியடைந்த இளைஞர்கள்.! | Mumbai Apartment Rape News | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்


மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட் மாடியில் 20 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆடையின்றி அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள அடுக்குமாடி அபார்ட்மெண்டில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. மொட்டை மாடியில் பெண்ணின் சடலத்தை கண்ட இளைஞர்கள் 18 வயது இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் குர்லா பகுதியில் உள்ள காலி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வீடியோ பதிவு செய்ய சென்றுள்ளனர். அப்போது, மொட்டை மாடியில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது என்று காவல்துறை துணை ஆணையர் பிரனய் அசோக் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த செப்டம்பர் மாதம், மும்பையின் சகினாகா பகுதியில் 30 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது அந்தரங்க உறுப்பும் கம்பியால் சிதைக்கப்பட்டது. நகரில் உள்ள மருத்துவமனையில் 33 மணிநேரம் உயிருக்குப் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஒரே குற்றவாளியான மோகன் சவுகான் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறுதான் இந்தக் குற்றத்திற்கு வழிவகுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, மாநில தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் மற்றும் மொபைல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை காவல்துறை ஆணையர் ஹேமந்த் நாக்ராலே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் பலி | Kancheepuram Accident in Bangalore Highway | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை அருகே உள்ள கேஎப்சி சிக்கன் கடை எதிரே இரவு 8 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் , நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்த சங்கீதா மற்றும் நீலவேணி ஆகியோர் சென்னை மார்க்கமாக நடந்து சென்ற போது, வேலூரில் இருந்து வந்த லாரி இருவர் மீது மோதியது. 

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி சென்று விட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுதாமூரில் இருளர்களுக்கு வழங்கப்பட்ட மழை கால நிவாரணப் பொருட்கள் | Sirudhamur Flood Relief | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிறுதாமூர் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த 20 இருளர் சமூக குடும்பத்தினர்களுக்கு கனரா வங்கியின் நிறுவனர் நினைவுநாளில் அரிசி, மளிகைப் பொருட்கள், பாய்கள், போர்வைகளை கனரா வங்கியின் துணைப் பொதுமேலாளர் செல்வராஜ் கனரா வங்கியின் மூலம் வழங்கினார்.

உடன் கனரா வங்கி மதுராந்தகம் கிளைமேலாளர் ஐஸ்வர்யா, சிறுதாமூர் கிராம பஞ்சாயத்து தலைவர் செல்லப்பன், துணைத்தலைவர் முத்து, வார்டு உறுப்பினர் ராஜு ஆகியோரும் இந்தச் சமூகப்பணியில் பங்கேற்று உதவினர். சிறுதாமூர் ஶீ ஶீனிவாசர் அறக்கட்டளையினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.







கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கிளி ஆற்று வெள்ளத்தில் நேற்று செல்பி எடுக்கும் பொழுது தவறி விழுந்து மனைவி கண்ணெதிரே கணவன் தண்ணிரில் மூழ்கி  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் ஜெயசக்தி நகரை சேர்ந்த தீனதயாளன் (37) இவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் மதுராந்தகம் வட்டம், கீழாமூர் பகுதியில் செல்லும் கிளி ஆற்றின் பாலத்தில் மழை வெள்ளத்தை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.


அப்போது கணவன் தீதையாளனை மனைவி சந்தியா தன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது மனைவி கண்ணெதிரே தண்ணீரில் தவறி விழுந்து ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், கிராம மக்கள் அவரை சடலமாக மீட்டனர்.  இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

எச்சரிக்கை: மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு ஷட்டர் திறப்பு | Emergency Shutter Opened in Madurantakam Lake | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அவசரகால மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

சுமார் இருபத்தி ஒன்பது புள்ளி தண்ணீர் அதாவது 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது.  

தற்போது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக் 27200 கன அடி வந்து கொண்டிருப்பதால் அவசரகால ஷட்டர் மூலம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது தானியங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக 27200 கனஅடியும் அவசரகால ஷட்டர் மூலம் 2300 கனஅடி தண்ணீரும் ஆக மொத்தம் வினாடிக்கு 29500 கன அடி தண்ணீர் உபரிநீராக கிளி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக ஆற்று கரையோரம் உள்ள கத்திரி சேரி, தோட்டநாவல், இருசமாநல்லூர், சகாய நகர் உள்பட 21 கிராமப்புறங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

மேலும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் துரித நிலையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பூமியில் இருந்து 3000 அடி ஆழத்தில் அமைந்துள்ள அழகான கிராமம்.. பலருக்கும் தெரியாத ஆச்சர்ய தகவல் | 3000 Feet Depth Village in the World | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

அமெரிக்கா என்றாலே அனைவரின் மனதிலும், வானுயர்ந்த கட்டிடங்கள், ரயில்கள், நாகரீகமான மனிதர்கள், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை தான் ஞாபகம் வரும்..

ஆனால், அமெரிக்காவில் வளர்ச்சியடையாத ஒரு கிராமம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அந்த கிராமம் பூமிக்கு இருந்து 3000 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

கிராண்ட் கேன்யன் என்ற பள்ளத்தாக்கு அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. அரிசோனாவில் உள்ள இந்த பள்ளத்தாக்கை பார்க்க ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.5 மில்லியன் மக்கள் வருகிறார்கள். இதற்கு அருகில் ஹவாசு கனியன் அருகே ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஒரு கிராமம் உள்ளது. மிகவும் பிரபலமான இந்த நிலத்தடி கிராமம் உலகின் அழகான கிராமமாகவும் கருதப்படுகிறது. 


இந்த கிராமத்தில் அமெரிக்க பூர்வீகவாசிகள் சுமார் 208 பேர் வசித்து வருகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் இந்த கிராமம் முற்றிலும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றைய நவீன காலத்திலும் இந்த கிராமம் முற்றிலும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த மக்கள் வேறு உலகில் வாழ்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.. இந்த கிராமவாசிகள் தங்கள் சொந்த பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். இந்த கிராமத்திற்கு பயணிக்க எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே இந்த கிராமத்தை அடைய வேண்டுமெனில், ஒருவர் நடந்தோ அல்லது கழுதையின் மீதோ செல்ல வேண்டும். உண்மையில், கிராமத்தையும் நகரத்தையும் இணைக்க உறுதியான வழி இல்லை. நகரத்திற்கு பயணிக்க குதிரைகள், கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிராமம் நகர்ப்புற வசதிகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இங்கு தபால் நிலையங்கள், கஃபேக்கள், 2 தேவாலயங்கள், லாட்ஜ்கள், ஆரம்ப பள்ளிகள் மற்றும் மளிகை கடைகள் உள்ளன. கிராமவாசிகள் ஹவாசுபை மொழியை பேசுகின்றனர்.. அவரைக்காய் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்களை அவர்கள் பயிரிடுகின்றனர்.

மேலும் கிராமத்தில் தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லை. அமெரிக்கா போன்ற நாட்டில் இப்படி ஒரு பின்தங்கிய கிராமம் இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கிராமத்தை பார்க்க செல்கின்றனர். ஆனால் இங்கு செல்வதற்கு முன் ஹவாசுபை பழங்குடி சபையிடம் அனுமதி பெறுவது இந்த கிராமத்தின் கூடுதல் சிறப்பு. கிராமத்திற்கு சென்ற உடன், நீங்கள் அவர்களின் விதிகளையே பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது | Kancheepuram Rowdy Arrest belongs Goondas | Vil Ambu News

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், பல்வேறு கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனபால் (24) த/பெ.ஆறுமுகம், லாலாகுட்டை தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் என்பவன் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தான்.
இவனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 27.11.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி  அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Sunday, November 21, 2021

பின்னப்பூண்டி திரௌபதியம்மன் ஆலயம் | சொக்கப்பனை கொளுத்துதல் 2021 | Pinnapoondi Sokkapanai 2021 | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருநாளன்று ஆண்டுதோறும் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெறும். அதுபோன்று இந்த ஆண்டும் (2021) சொக்கப்பனை கொளுத்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.

Saturday, November 20, 2021

எய்ப்பாக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் | வந்தவாசி ஒன்றியம் | Eipakkam Water Block Issues | Vil Ambu News

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், எய்ப்பாக்கம் கிராமத்தில் கால்வாய்கள் தூர்வாராத காரணத்திணாலும், தனிநபர்கள் தேவையற்று கால்வாய் மற்றும் வாராபதிகள் அருகே மண் கொட்டியுள்ள காரணத்தினாலும் மழைநீர் தேங்கி அப்படியே தேங்கி நிற்கிறது. 

மேலும், இதனால் கொசு உற்பத்தி அதிகமாவதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஏதும் முயற்சி மேற்கொள்ளததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம மக்களின் நலன் காக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் தங்களின் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Download News Shutter App on Play store : https://play.google.com/store/apps/details?id=com.app.newsshutter&hl=en_IN&gl=US 




Tuesday, November 16, 2021

சூர்யாவை பா.மா.க-வினர் விமர்சிக்க கூடாது - அவர் சாதி சார்பற்றவர் | அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் | Southern Cinima Industry Writing Letter to Anbumani Ramadass about Jaibhim Movie and Actor Surya Issues | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

நடிகர்
சூர்யா ஜாதி, மத சார்பற்றவர், அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதி உள்ளது. ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வழக்கு

இன்னொரு பக்கம் ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆதரவு

இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை களமிறங்கி உள்ளது. அதன்படி ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இருக்கும் ஒரு காட்சியை அகற்றும்படி நீங்கள் கோரிக்கை வைத்து இருந்தீர்கள். தங்கள் கட்சியின் முத்திரை அது என்று கூறி நீக்கும்படி கோரிக்கை வைத்தீர்கள். இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஜெய் பீம்

உங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருக்கும் சூர்யா அந்த காட்சியை நீக்கினார். ஆனால் இந்த காட்சி வைக்கப்பட்டதற்கும், அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்கு எந்த விதத்திலும் நடிகர் சூர்யாவிற்கு தொடர்பு இல்லை. அதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

உணர்வு

ஆனால் பாமக கட்சியினர் தொடர்ந்த இதை முன்னிட்டு சூர்யாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சூர்யா அரசியல், ஜாதி, இனம், மதம் போன்ற எந்த சார்பும் இன்று செயல்படுபவர். எந்த சார்பும் இன்றி ஏழை மக்களுக்கு உதவ கூடியவர். 

மாணவர்கள்

பல விளிம்புநிலை மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக சூர்யா செயல்பட்டு வருகிறார். அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றி வருகிறார். சமூக பணியாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறோம், என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.